விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் விஜய்யின் 67-வது படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாள மொழிகளில் எடுக்க இருப்பதால் ஒவ்வொரு மொழியில் இருந்து ஒரு வில்லன் நடிகர்களை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தி நடிகர் சஞ்சய்தத், மலையாள நடிகர் பிருதிவிராஜ் ஆகியோர் இந்த பரிசீலனையில் உள்ளனர்.
தமிழில் இருந்து அர்ஜுனை வில்லனாக நடிக்க வைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் பரவி உள்ளது.
மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இன்னொரு நாயகியாக சமந்தா பெயர் அடிபடுகிறது என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து
நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஷோ மூலமாக தான் தனது இர
தனியார் தொலைக்காட்சியில் வலம் வந்த பூஜா ராமசந்திரன்,
நயன்தாரா, விக்கி திருமணம்- ஷாருக்கான், ரஜினி, டிடி என தி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், தற
ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அ
வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் புதிய திரைப்ப
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'கேஜிஎஃப்' முதல் பாகம் வெற
ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் நடிப்பில் தற
தமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990 மற்றும் 2000-க
விஜய் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் வனிதா விஜயகும
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பி
இந்திய பொலிவூட் திரைப்பட சூப்பர் ஸ்டார் ககன் மலிக் நே
