அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளி மாணவி ஹரிணி லோகன் பட்டம் வென்றுள்ளார்.
அமெரிக்காவில், ஆங்கில வார்த்தைகளுக்கான சரியான, ஸ்பெல்லிங் சொல்லும், தேசிய ஸ்பெல்லிங் பீ போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதுடன், இந்தப் போட்டிகளில் உலக நாடுகளைச் சேர்ந்த, நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர்கள் பங்கேற்பர்.
இந்நிலையில், இந்தாண்டு அமெரிக்காவில் இடம்பெற்ற போட்டியில் இந்திய வம்சாவளி மாணவி ஹரிணி லோகன் ஸ்பெல்லிங் பீ என்ற ஆங்கில உச்சரிப்புப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற ஹரிணி லோகனுக்கு பட்டத்துடன் இந்திய மதிப்பில் சுமார் 38 இலட்சத்து 80 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டிற்கான ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ பட்டத்தை ஹரிணி லோகன் வென்றுள்ளார். பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டியில் நடுவர்கள் குழு அளிக்கும் ஆங்கில வாக்கியத்தின் சரியான உச்சரிப்பை (ஸ்பெல்லிங்) மாணவர்கள் சொல்ல வேண்டும். பல கட்டங்களுக்கு பிறகு இறுதிச்சுற்றில் 2 மாணவர்கள் போட்டியிட்டார்கள்.
டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவி ஹரிணி லோகன் (8 -ம் வகுப்பு), இந்திய வம்சாவளி மாணவன் விக்ரம் ராஜு ஆகியோர் இறுதிப்போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
இறுதியில் ஒரு நீண்ட வாக்கியத்தின் உச்சரிப்பில் ஹரிணி லோகன் 21 வார்த்தைகளை சரியாகக் கூறி பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளதுடன், விக்ரம் ராஜு 15 வார்த்தைகளை கூறி 2 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
மதுபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண், கொ
காலாவதியான 100 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் அழிக
மத்திய பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வ
இந்தியாவில் பங்கு சந்தை வீழ்ச்சியால் கணவர், மனைவி தூக
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமி
நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை பரவல் சற்று தண
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்
மராட்டிய சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு முதல்-மந்திரி பத
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்க
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பா
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ர
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்ல
உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல்
