கொலன்ன பகுதியில் கொள்ளையிடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்திய மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் இரண்டு இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவத்தில் இருந்து தப்பி வந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொலன்ன புதிய நகரில் வசித்து வரும் இரண்டு இளைஞர்களுக்கு சொந்தமான சுமார் 7 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன என கொலன்ன காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் வெலிமடை, கெப்பட்டிபொல மற்றும் திஸ்ஸமஹாராம லுணுகம்வெஹெர பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக எம்பிலிப்பிட்டிய பணாமுர, மொனராகலை நக்கல மற்றும் அரலங்கவில பகுதிகளை சேர்ந்த சந்தே நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் இரண்டு பேர் இராணுவத்தில் கடமையாற்றி வருவதுடன் விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளனர். மற்றைய சந்தேக நபர் இராணுவத்தில் கடமையாற்றிய நிலையில் தப்பியோடியவர் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் கொலன்ன காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விக்டோரியா மற்றும் ரந்தெனிகல நீர்த்தேக்கங்களில் இரு
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம
கோப்பாயில் சட்டத்துக்குப் புறம்பாக கலப்பட மதுபான உற்
பதுளை - ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தையில் (4ஆம் பிரிவு) வ
பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று ந
கடந்த சில மாதமாக யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் களவாடப்
இன்றைய தினம் குறித்த இறங்கு துறைக்கான கண்காணிப்பு விஜ
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண
இலங்கையில் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப
இலங்கையில் நேற்றைய தினம் மேலும் ஆயிரத்து 625 சுகாதார பி
மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக
கொரோனா பாதிப்பால் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தி
தோட்டத்தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை
ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலயில் ஏற்றுமதிக்கு பதப்படுத்
இலங்கையின் இந்த வருட கடனை அடைப்பதற்கு 5 பில்லியன் அமெர
