மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.பி. க்கள் டி.கே.எஸ். இளங்கோவன், ஆர் .எஸ் .பாரதி, கே .ஆர். என் ராஜேஷ்குமார் மற்றும் அதிமுக எம்.பி.க்களான நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் , விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. இதனால் தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகள் காலியாகும். இதனால் நாடு முழுவதும் 57 எம்.பி.க்களின் இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது
ஒவ்வொரு மாநிலங்களவை எம்,பி தேர்வாவதற்கும் 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதன்படி திமுக 4 இடங்களும், அதிமுக இரண்டு இடங்களுக்கும் போட்டியிடுகிறது. 18 எம்எல்ஏக்கள் கொண்டுள்ள தமிழ்நாடு காங்கிரசுக்கு ஒரு இடத்தை திமுக ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலர் தர்மர் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசனிடம், சி.வி. சண்முகம், தர்மர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

உலகம் முழுவதையும் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் த
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டிய
நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதி
தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையா
தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6-
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு எல்லையில் உள்ள சோதனைச்சாட
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் உயர்மட்டக் கூட்டத்தி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் அரசுப் பயணமாக
பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற்
தமிழகத்தில்
இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா தலங்களில் மாஸ்க் அணியா தமிழ்நாட்டில் BA.4 கொரோனா என்ற புதியவகை கொரோனா தொற்று பா திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா ஆவார். இவர் நேற்று தனத போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நி இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் நேற்று த
