இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை எப்போதும் சீரான இடைவெளியில் வைத்து கொள்ள வேண்டும். இரத்தத்தில் கொழுப்பு அதிகரித்தால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பல நோய்கள் ஏற்படும்.
நம்மில் பலர் நமது உடலில் உள்ள கொழுப்பின் அறிந்து கொள்வது இல்லை.
இரத்தத்தில் உள்ள கொழுப்பு அதிகரித்து நாம் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம் என்பதை நமது உடலானது பல வழிகளில் நமக்கு உணர்த்தும்.
அதையும் நாம் கண்டுகொள்வது இல்லை.
கொழுப்பு அதிகரிக்க என்ன காரணங்கள்
இரண்டு வகையான கொழுப்புகள் உள்ளன. அவை எல்டிஎல் (LDL) கொழுப்பு மற்றும் ஹச்டிஎல் (HDL) கொழுப்பு ஆகும்.
இதில் எல்டிஎல் நல்ல கொழுப்பு ஆகும். ஹச்டிஎல் கெட்ட கொழுப்பு ஆகும்.
அளவுக்கு அதிகமான எல்டிஎல் கொழுப்பும் அல்லது தேவைக்கும் குறைவான அளவு ஹச்டிஎல் கொழுப்பும் இருந்தால், கொழுப்பு சம்பந்தமான பிரச்சினைகள் அதிகரிக்கும்.
அதாவது கெட்ட கொழுப்பானது இதயம் மற்றும் மூளை ஆகியவற்றுக்கு உணவளிக்கும் தமனிகளின் உட்சுவா்களில் படிப்படியாக தேங்கிவிடும்.
கொழுப்பானது மற்ற துகள்களுடன் இணைந்து, கட்டியாகி, கடினமான பொருளாகி தமனிகளின் உட்பகுதிகளில் தேங்கிவிடும். அவ்வாறு தேங்கும் கொழுப்பானது தமனிகளைச் சுருக்கிவிடுகிறது.
இது மட்டும் இல்லை அவற்றின் நெகிழ்வு தன்மையையும் குறைத்துவிடுகிறது.
தமனிகளின் குறுகிய மற்றும் நெகிழ்வுத்தன்மையற்ற இந்த நிலையானது பெருந்தமனி தடிப்பு நோய் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு வேளை இரத்தம் உறைந்து. இந்த குறுகிய தமனிகளை அடைத்தால், மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
கொழுப்பை எப்படி கண்டறிவது?
கொழுப்பு கண்டறிய இரத்தப்பரிசோதனை அவசியம்.
எனினும் உடலில் கொழுப்பு அதிகரிக்கும் போது அது உடலில் கால்கள் போன்ற பகுதிகளில் சில எச்சரிக்கை அறிகுறிகளை உண்டாக்கலாம்.
தமனிகளின் அடைப்பு புற தமனி நோய் அல்லது பிஏடி என்று அழைக்கப்படுகிறது. பாதிக்கப்படக்கூடிய சில தமனிகள் கால்களுக்கு இரத்தத்தை வழங்கக்கூடும். அதனால் உங்கள் கால்களில் இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம்.
கால்களில் உள்ள தமனிகள் அடைபடும்போது, போதுமான ஆக்சிஜன் நிறைந்த ரத்தம் கால்களின் கீழ் பகுதியை அடையாது. அப்போது, கால்களின் கீழ்ப்பகுதி கனமானகவும், சோர்வாகவும் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். கீழ் மூட்டுகளில் எரிச்சல் பெரும்பாலானோருக்கு ஏற்படும்.
தொடை உள்ளிட்ட கால் பகுதிகளில் அதிக வலி இருக்கும். சிறிய தூரம் நடந்தால்கூட அதிகமான வலி இருந்தால், கொலஸ்ட்ரால் அளவை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும்.
கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்களுக்கு கால் பிடிப்பு பிரச்சனைகள் இருக்கும். தூங்கும் சமயங்களில் கடுமையான கால் வலிகளை உணரும் அவர்கள், குதிங்கால், கால் விரல்களில் கடுமையான வலிகளை எதிர்கொள்வார்கள். கால்களை தொங்கிய நிலையில் வைத்திருக்கும்போது மட்டும், வலி குறைந்தது போன்ற உணர்வு அவர்களுக்கு இருக்கும்.
ரத்த ஓட்டம் குறைவது மூலம் கால் நகங்கள் மற்றும் தோல் நிறம் மாறும். ரத்தத்தின் மூலம் கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் முறையாக கிடைக்கும்போது நகங்களின் நிறம் மாறாது.
ஒருவேளை உங்கள் நகங்கள் மாறினால், போதுமான ஊட்டசத்து கிடைக்கவில்லை என புரிந்து கொள்ளுங்கள். கால் நகம் தடித்து மெதுவாக வளர்வதும், கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறியாகும்.
குளிர்காலங்களில் பாதம் குளிர்ந்த நிலையில் இருக்கும். ஆனால், கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்களுக்கு ஆண்டு முழுவதும் காலின் பாதம் ஒரேமாதிரியாக இருந்தால், நீங்கள் கட்டாயம் மருத்துவரிடம் சென்று ஆலோசனை செய்வது சிறந்தது.
நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவைத் தொிந்து கொள்வதற்காக மருத்துவா் நம்மை இரத்த பாிசோதனை செய்து கொள்ள பாிந்துரை செய்வார