யாழ்ப்பாணம்

 • All News
 • எரிபொருள் நிரப்ப அனுப்பிய கணவனை தவிக்கவிட்டு ஓட்டமெடுத்த மனைவி!
எரிபொருள் நிரப்ப அனுப்பிய கணவனை தவிக்கவிட்டு ஓட்டமெடுத்த மனைவி!
May 24
எரிபொருள் நிரப்ப அனுப்பிய கணவனை தவிக்கவிட்டு ஓட்டமெடுத்த மனைவி!

கணவனின் ​மோட்டார் சைக்கிளுக்கு, ஒவ்வொருநாளும் பெட்ரோல் நிரப்புவதற்காக, எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அவருடைய மனைவி சென்றுவந்துள்ளார்.அவ்வாறு சென்றுவந்த மனைவி, எரிபொருள் நிரப்பும் ஊழியருடன் சில நாட்களிலேயே ஓட்டமெடுத்துவிட்டார். இந்த சம்பவம் தென் மாகாணத்தி​லேயே இடம்பெற்றுள்ளது.புது ஜோடியான அவ்விருவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பே திருமணம் செய்துகொண்டுள்ளனர். கணவன் வேலைக்குச் சென்றவுடன் வீட்டு வேலைகளை மனைவி கவனித்து வந்துள்ளார்.இருவரும் முன்னர் ஆடைத்தொழிற்சாலையில் வேலைச் செய்துவந்துள்ளனர்.அங்கு ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர்ந்து இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இருவரும் ஸ்கூட்டியில் பயணிக்கும் போது, ஸ்கூட்டியை அப்பெண்ணே, செலுத்திச்செல்வார். கணவன் பின்னால் அமர்ந்திருந்து பயணிப்பார்.வேலைக்குச் செல்லும் கணவனை, ​மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு வரும் அப்பெண், வீட்டு​ வேலைகளை முடித்துக்கொண்டு மீண்டும் மாலைவேளையில் பஸ் நிலையம் சென்று கணவனை அழைத்துவருவாள்.எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஸ்கூட்டிக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு, வரிசையில் நிற்கவேண்டிய நிலைமை அப்பெண்ணுக்கு ஏற்பட்டது. எரிபொருளை நிரப்பும் போது, ஏ​தோவொன்றை கூறிய அப்பெண், எரிபொருள் நிரப்புவரை தன் வலைக்குள் விழச்செய்து, அலை​பேசி இலக்கத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.இன்றேல் இருவரும் இலக்கங்களை பகிர்ந்துகொண்டனர். குறுஞ்செய்திளை பகிர்ந்துகொண்ட இவ்விருவரும், காதல் வலைக்குள் விழுந்துவிட்டனர். இரண்டொருநாள் கடந்த இலையில், பஸ்நிலையத்துக்கு காலையில் கணவனை ஏற்றிவந்த அப்பெண், எரிபொருள் நிரப்புவருடன் பறந்துசென்றுவிட்டாள்.​அன்றையதினம் கடமையை முடித்துகொண்டு வீட்டுக்குச் செல்வதற்காக, பஸ் நிலையம் திரும்பிய கணவன், மனைவியை காணாது அங்குமிங்கும் தேடியலைந்தார். மனைவியின் அலைபேசியும் இயங்கவில்லை. என்னவோ, ஏதோவென ஓட்டோவொன்றை பிடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றார் கணவன், வீடும் பூட்டியிருந்தது.அலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தினாலும், மனைவி அலைபேசி இயங்கவில்லை. என்னசெய்வதென திகைத்திருந்த கணவனின் அலைபேசிக்கு குறுஞ்செய்தியொன்று வந்தது. “நான், ஷெட் அய்யாவுடன் செல்கின்றேன். என்னை தேட வேண்டாம். நீங்கள். சந்தோஷமாய் இருங்கள்” என அதில் இருந்துள்ளது.இதுதொடர்பில் கணவன் பொலிஸில் முறையிட்டுள்ளார். மூவரையும் அழைத்த பொலிஸார், கணவனையும் மனைவி​யையும் சேர்த்து வைப்பதற்கு பலமுறை முயற்சித்தனர்.எனினும், அது கைகூடவில்லை. “நான், இவருடன் சந்தோஷமாக வாழ்கின்றேன்” என பொலிஸாரிடம் தெரிவித்த மனைவி, எரிபொருள் நிரப்புவருடன், மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றுவிட்டாராம்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

யாழ்ப்பாணத்தில் காதல் விவகாரம் காரணமாக வன்முறை சம்பவ

Feb13

தொண்டைமானாறு செல்வச் சந்நிதியில் திருமண வைபவம் ஒன்று

Jan19

யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமியொருவர் கிணற்றில்

Jan12

திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்ற ‘மிஸ் கோல்’

Mar19

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாணத்திற்கான வருகை

Jan15

யாழ்.சாவகச்சோி - மீசாலை மற்றும் கிராம்புபில் பகுதிகளி

Jan24

இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்த

Jan15

யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் தோட்ட நிலத்தை உழுது க

Jan15

யாழ்.ஓட்டுமடம் - காக்கைதீவு வீதியில் உள்ள வீடொன்றுக்க

Feb09

டெங்கு காய்ச்சலுக்ககான புள்ளி விபரத்தின் படி யாழ். மா

Mar30

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற விபத்தில்

Feb05

“உயிரிழந்த மீனவர்களின் ஆத்மாவாக கேட்கிறேன்” அத்து

Feb20

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர

Jan13

உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் ´தைப

Feb06

யாழ்.கரவெட்டியில், வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளை

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (15:42 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (15:42 pm )
Testing centres