கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கும் பின்னர் மங்களூருவிற்கும் அழைத்துச்செல்லப்பட்ட 38 இலங்கையர்களை சட்டவிரோதமாக கனடாவிற்கு அனுப்புவதற்கான மனித கடத்தல் முயற்சி தொடர்பில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் தாக்கல் செய்த முன்பிணை மனுவை இந்தியாவின் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பதாவது சந்தேக நபரான, தமிழ்நாடு- ராமநாதபுரத்தை சேர்ந்த சீனி அபுல்கான், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தலைமறைவாகியுள்ளார்.
இந்தநிலையில் அபுல்கான், தமக்கு நிவாரணம் கோரி முன் பிணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
தமது கட்சிக்காரர், அகதிகள் என்று நம்பியே இலங்கையர்களை வரவழைத்ததாக அவரது சட்டத்தரணி நீதிமன்றில் வாதிட்டார்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக இலங்கை அகதிகள் இந்தியாவிற்கு வருவது தற்போது சர்வசாதாரணமாக உள்ளது.
மேலும் அங்கிருந்து அகதிகளை ஏற்று அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்குவதில் இந்திய அரசாங்கம் தாராளமாக உள்ளது என்றும் சட்டத்தரணி வாதிட்டார்.
எனினும்,அபுல்கான், பல்வேறு குற்றங்களை செய்துள்ளார். மங்களூருவில் இருந்த இலங்கையர்கள்; தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று பொதுமக்களை தவறாக வழிநடத்தியுள்ளார்.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்கள் சிறந்த எதிர்கால வாய்ப்புகளுக்காக கனடாவிற்கு அனுப்புவதாக உறுதியளித்துள்ளார் என்று அரச தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர்.
மனுதாரராக அபுல்கான் தலைமறைவாகி, ஆரம்பத்திலிருந்தே விசாரணையின் செயல்முறையைத் தவிர்க்கிறார் என்றும் அரச தரப்பு மன்றில் சுட்டிக்காட்டியது.
இதனையடுத்து நீதிபதி கசனப்ப நாயக் முன்பிணை மனுவை நிராகரித்தார் மனுதாரர் குற்றத்தில் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார் என்பதையும், அவரைக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவு கொரோனா த
பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ந் தேதி சமூக நீதி நாள
இந்தியா கொரோனா வைரஸ் 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்க
காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் மஜீன் கிராமத்தில
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக
டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பிரதமர் ந
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையை வீழ்த்துவதற்காக நாடு
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஆ
சாலை மறியல் செய்த விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியட
கோவை ஓட்டர்பாளையம் சம்பவத்தில் விவசாயி கோபால்சாமி மீ
காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தின் கனிகாம் என்ற பகு
’’ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் உண்மையாக இல்லை - திமு
தளர்வுகளற்ற பொதுமுடக்கம் நாளை அமலுக்கு வருவதையொட்டி,