இலங்கையில்,இடம்பெறும் சிவில் சமூகம், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துமாறு அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் நேற்று பேசிய அமெரிக்கா, பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான இலங்கையின் முயற்சியையும் 40க்கும் மேற்பட்டவர்கள் சமீபத்தில் விடுவிக்கப்பட்டமையும் வரவேற்றுள்ளது.
இருப்பினும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்க இலங்கையில் பயங்கவராத தடைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கருத்துச் சுதந்திரம் இவற்றுள் முக்கியமானது என்றும் அமெரிக்கா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இலங்கையில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் இணைந்து நிரந்தரமான அரசியல் தீர்வை முன்னெடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் நல்லிணக்கத்தை மேம்படுத்த, காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் ஆகியவை திறம்பட, சுதந்திரமாக, வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
அதேசமயம் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகம் பாதுகாப்பு அமைச்சிலிருந்து வெளியேறிமை மற்றும் சில சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் ஈடுபடுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளையும் அமெரிக்கா வரவேற்றுள்ளது.
இயற்கை என்றுமே அதிசயம் மிக்கதும், அதிக சுவாரசியம் கொண பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததா இலங்கையர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் விசா ம மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் என் கடந்த ஒரு வருடத்தில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் ப சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன் சீனாவில் உலக தமிழ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூப் பல்கலை இலங்கையின் சுதந்திர தினத்திற்கு அமெரிக்க ராஜாங்கச் ச இலங்கையில்,இடம்பெறும் சிவில் சமூகம், மனித உரிமைகள் பா தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் மிஸ் எவ இலங்கையில் ஒமிக்ரோனின் புதிய மாறுபாட்டால் கோவிட் நோய இன்று அநேகரின் வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை இ இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு லண்ட
