இந்தியா

  • All News
  • உள்ளாட்சி தேர்தல் நடந்துமுடிந்துள்ள நிலையில், சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் நாளை!
உள்ளாட்சி தேர்தல் நடந்துமுடிந்துள்ள நிலையில், சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் நாளை!
Jan 06
உள்ளாட்சி தேர்தல் நடந்துமுடிந்துள்ள நிலையில், சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் நாளை!
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்துமுடிந்துள்ள நிலையில், சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் நாளை ( ஜனவரி 6ம் தேதி) துவங்க உள்ளது. இந்த தேர்தலில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட சலசலப்பின் காரணமாக, பல இடங்களில் இந்த கூட்டணி, அதிமுகவிடம் தனது இடங்களை பறிகொடுத்துள்ளது. இந்த செயல் திமுக தலைவர் ஸ்டாலினை பெரும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளதாகவும், கட்சி மற்றும் கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடாத நிர்வாகிகள் மீது சட்டசபை கூட்டத்தொடருக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக, கட்சி மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் 2016 சட்டசபை தேர்தலில் ஒரு இடத்தில் கூட ஜெயிக்காத அதிமுக, அதுவும் விளவங்கோடு தொகுதியில் டெபாசிட் இழந்திருந்தது. ஆனால், இந்த உள்ளாட்சி தேர்தலிலோ, 4 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்களையும், 16 பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் இடங்களையும் வென்றுள்ளது. அதன் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி, 2 மாவட்ட பஞ்சாயத்து இடங்களையும்ல 31 பஞ்சாயத்து யூனியன் இடங்களையும் கைப்பற்றியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை திமுக – காங்கிரஸ் இடையே இடபங்கீடு விவகாரத்தில் சிறிது சலசலப்பு நிலவிவந்தது உண்மை தான். காங்கிரஸ் கட்சி, 5 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் இடங்களை வென்றுள்ளது. திமுக, 21 பஞ்சாயத்து யூனியன் இடங்களையும், காங்கிரஸ் 24 பஞ்சாயத்து யூனியன் இடங்களை வென்றுள்ளது.

ஸ்டெர்லைட் போராட்டம், துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட காரணங்களால், ஆளுங்கட்சி மீது அதிருப்தியில் இருந்த தூத்துக்குடி மக்களின் மனநிலை, இந்த உள்ளாட்சி தேர்தலில் மாற்றம் கண்டுள்ளது, இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி இங்கு வெற்றி பெற்றுள்ள போதிலும், முக்கிய எதிர்க்கட்சியான திமுக, இந்த உள்ளாட்சி தேர்தலில், 17 மாவட்ட பஞ்சாயத்து இடங்களில் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் இடங்களில் 61 இடங்களை திமுக வென்றிருந்த நிலையில், அதிமுக 63 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மீனவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தூத்துக்குடி பகுதியில், திமுக சரிவை சந்தித்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாது.

கன்னியாகுமரியில் ஏற்பட்ட பின்னடைவுக்கு திமுக – காங்கிரஸ் இடையே நிலவிய இடபங்கீடு காரணமாக சொல்லப்பட்டாலும், தூத்துக்குடி மாவட்டத்தில் அந்த பிரச்னையே எழவில்லை. தூத்துக்குடி, கன்னியாகுமரி, தர்மபுரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து ஆராயப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சிதான். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில், அதிமுகவின் திட்டங்களால், மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May30

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முட

Jul30

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய படையினா் போா்ந

Feb08

டெல்லி சட்டசபை தேர்தலில், மதியம் 12 மணி வரை 15.57 சதவீத வாக்க

Feb02

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா டில்லி மர

Jan06

நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கூட்டணி

May14

 தமிழகத்தில் இன்று மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று ,

Jun05

தமிழகத்தில் அக்காவும், தம்பியும் நீரில் மூழ்கி உயிரிழ

Jun15

   இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊர

Jun11

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அ

Jun08

தமிழகத்தில் மேலும் 1562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய

Feb05

மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமான வ

Jan28

ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதா

Jun03

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மாநில வேளாண்மைத்துறை இயக

Jun13

தமிழகத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,982 பேரில

May29

இந்தியாவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியு

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (00:40 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (00:40 am )
Testing centres