மட்டக்களப்பு

 • All News
 • தேங்கி நிற்கும் வெள்ள நீர் வெளியேற்ற முடியாமல் மக்கள் அவதி
தேங்கி நிற்கும் வெள்ள நீர் வெளியேற்ற முடியாமல் மக்கள் அவதி
Mar 04
தேங்கி நிற்கும் வெள்ள நீர் வெளியேற்ற முடியாமல் மக்கள் அவதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில் பெரும்பாலான தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதனால் பல வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது.இதனால் அங்குள்ள கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள், குழந்தைகள் என பலதரப்பட்ட மக்களும் மிகுந்த இன்னல்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.பட்டிருப்பு, எருவில் பகுதியில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு மண்முனை தென் எருவில் பிரதேச சபையினர் பெக்கோ இயந்திரத்துடன் குறித்த இடத்திற்கு வியாழக்கிழமை(03) வருகை தந்திருந்தனர்.எனினும் வெள்ள நீரை வெளியேற்றுவது தொடர்பில் பட்டிருப்பு மற்றும் எருவில் கிராம மக்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. அவ்விடத்திற்கு வருதை தந்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் சா. அறிவழகன், கிராம சேவை உத்தியோகஸ்தர், களுவாஞ்சிகுடி பொலிசார் விஜயம் செய்து நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.இறுதியில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அபேய விக்கிரம ஸ்தலத்திற்கு விஜயம் செய்து இரு கிராமத்தவர்களுடனும் கலந்துரையாடி மக்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் வெள்ள நீரை வெளியேற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கியதற்கிணங்க பிரதேச சபையினரால் வெள்ளநீர் வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பாரிய தென்னை மரம் ஒன்று எருவில் கிராமத்தில் அமைந்துள்ள குடியிருப்பு வீடொன்றில் வீழ்ந்துள்ளது.  


வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

மட்டக்களப்பு - கொழும்பு வீதி ஊறணி சந்தியில் மோட்டார் ச

Jan25

  மட்டக்களப்பு தலைமையக பொலிஸ்  பிரிவிலுள்ள பார்வீத

Feb07

 மட்டக்களப்பில் உள்ள உணவகங்களை நேற்று சோதனையிட்டதி

Jan26


 கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலன்னறுவை - க

Feb10

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்றில் முதல் தடவையாக ப

Feb15

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுவரித்திணைக்களத்தினால்

Jan22

மட்டக்களப்பு-களுவாஞ்சிகுடியில் பிளாஸ்டிக் பீப்பாய்

Feb04

மட்டக்களப்பு மாவட்ட சுதந்திர ஊடகவியலாளர் புண்ணியமூர

Jan30

நாங்கள் இந்தியாவின் முகவர்கள் என சித்தரிக்கின்ற தமிழ

Jan18

மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கடலில் மீன் பிடிக்கச் ச

Mar04

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட

Feb03

காணாமல்போன நிலையில் தேடப்பட்டு வந்த, வாழைச்சேனை பொலிஸ

Feb11

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முதல் பெய்துவரும் க

Mar04

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பலத

Feb09

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மட

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 07 (17:21 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 07 (17:21 pm )
Testing centres