ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக தமது கடல் எல்லைக்குள் வந்த ரஷ்ய செல்வந்தர் ஒருவரின் செகுசு படகை பிரித்தானியா சிறைபிடித்துள்ளது.
Phi என பெயரிடப்பட்ட £38 மில்லியன் பெறுமதியான குறித்த படகு, பெயரிடப்படாத ரஷ்ய தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து செயலாளர் கிரான்ட் ஷாப்ஸ் கருத்து வெளியிடுகையில்,
சிறைபிக்கப்பட்ட செகுசுபடகுக்கு சொந்தமான தனிநபர் தற்போது அனுமதிக்கப்படவில்லை, ஆனால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் நெருக்கமான தொடர்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்ய தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு எதிராக பிரித்தானியா பொருளாதாரத் தடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 58.5 மீ (192 அடி) நீளமான குறித்த படகு ரஷ்யாவிற்குச் சொந்தமானதாக இருக்கலாம் என கடந்த 13ம் திகதி முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது.ஆனால் அதன் உரிமை "வேண்டுமென்றே நன்கு மறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியது.
கப்பல் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் கரீபியன் தீவுகளான செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸில் உள்ளது, ஆனால் அதன் தோற்றத்தை மறைக்க மால்டிஸ் கொடிகளை பறக்கவிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை "புடினுக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் ஒரு தெளிவான எச்சரிக்கை" என்று கிரான்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.
"படகு இப்போதைக்கு எங்கும் செல்லாது" என்று அவர் கூறினார்.புடினின் ஆட்சியில் இருந்து பயனடைந்தவர்கள் இது போன்ற கப்பல்களில் லண்டன் மற்றும் இங்கிலாந்தைச் சுற்றிப் பயனடைய முடியாது." எனவும் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் வீட்டை காலி செய்யும் முன் 4 ஆயிரம் கி
உக்ரைனுக்கு 375 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவிக
தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார ந
தமிழர் ஒருவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தற்போது உல
பிரித்தானியாவின் சில பகுதிகளில் இந்த வாரம் அதிக வெப்ப
பொழுதுபோக்குவதற்காக பறவைகளைப் பார்ப்பதற்காக செல்வதா
பிரித்தானியாவில் புகலிடம் கோர காத்திருப்பவர்களுக்கு
பிரித்தானியாவில் ரஷ்ய விமானம் ஒன்று சிறைப்பிடிக்கப்
ஸ்காட்லாந்திலுள்ள Ayrshire என்ற இடத்தில், நிலத்திலிருந்து
உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து ரஷ்யா மீது தடைகள் விதிக்
லண்டன் சிறையில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை செய்துகொ
லண்டனில், இளம்பெண் ஒருவர், கோடீஸ்வரர் ஒருவருடைய மகனால
சிறுவர் இல்லமொன்றை நடத்திவரும் டெபோரா எதிரிசிங்கவுக
கிழக்கு லண்டன் நெடுஞ்சாலையில் மின்சார ஸ்கூட்டர் ஒன்ற
உக்ரைன் மீதாக ஆக்கிரமிப்பை தொடர்ந்து ரஷ்யாவில் இருந்