பிரபல தெலுங்கு நடிகை காயத்ரி டாலி ஹோலி கொண்டாட்டம் முடிந்து வீடு திரும்பிய போது கார் விபத்தில் உயிரிழந்தார்.
பிரபல தெலுங்கு நடிகையான காயத்ரி டாலி(26) '' மேடம் சார் மேடம் அந்தே'' என்ற வெப் சீரிஸில் நடித்து பிரபலமானவர். மேலும் இவர் ஜல்சா ராயுடு என்ற பிரபல யூடியூப் சேனலிலும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி ஆண் நண்பரான ரத்தோட் என்பவருடன் ஹைதராபாத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிவிட்டு கச்சிபோலிக்கு வந்து கொண்டிருந்தார்.
காரை ரத்தோட் ஓட்டி வந்த நிலையில், கார் கட்டுப்பாட்டை இழந்து கார் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பிரபல நடிகை காயத்ரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆண் நண்பரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், காப்பாற்றமுடியாமல் அவரும் உயிரிழந்துள்ளார்.
இவர்கள் இருவர் மட்டுமின்றி, சாலையை கடந்து செல்ல முயன்ற பெண் பாதசாரி ஒருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை இவ்வாறு ஆண் நண்பருடன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி
கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெ
வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரிய
நடிகர் தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவகர் இயக்க உள்ளார
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இயக்குனர் சு
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி நடித்துள்ள ஆந்தாலஜ
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘ம
பிரபலங்கள் மீடியாவில் ஒரு வார்த்தை தவறாக பேசினாலே அது
தமிழில் ஒஸ்தி படத்தில் வில்லனாக நடித்தவர் சோனுசூட். க
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வலி
மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடி
தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக சூப்பர் ஹாட் நியூ
சமீபத்தில் தமிழகமெங்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற
மகன்களுடன் இசை நிகழ்ச்சிக்கு வந்த தனுஷிடம் இளையராஜா உ
