பிரான்ஸ்

 • All News
 • பிரான்சில் குப்பை கூளமாக கிடப்பதாக வீட்டை விற்ற நபர்: வாங்கியவர்களுக்கு அடித்த பெரும் அதிர்ஷ்டம்
பிரான்சில் குப்பை கூளமாக கிடப்பதாக வீட்டை விற்ற நபர்: வாங்கியவர்களுக்கு அடித்த பெரும் அதிர்ஷ்டம்
Mar 22
பிரான்சில் குப்பை கூளமாக கிடப்பதாக வீட்டை விற்ற நபர்: வாங்கியவர்களுக்கு அடித்த பெரும் அதிர்ஷ்டம்

பிரான்சில் குப்பை கூளமாக கிடப்பதாகக் கூறி தனது பாரம்பரிய வீட்டை விற்றுள்ளார் ஒருவர்.அதில் புதையல் இருப்பதாக தான் கேள்விப்பட்டது உண்மைதான் என்றாலும், அது காணாமல் போய்விட்டதாக நம்பினார் அவர்.அவரிடமிருந்து 130,000 யூரோக்களுக்கு அந்த சொத்தை வாங்கியுள்ளது Morez நகராட்சி.புதுப்பிப்பதற்காக அந்த வீட்டை இடிக்கும்போது, ஜாம் போத்தல்களில் ஐந்து தங்கக்கட்டிகளைக் கண்டெடுத்துள்ளார்கள் பணியாளர்கள். அவற்றின் மதிப்பு 500,000 யூரோக்கள்!பின்னர் மீண்டும் சிறிது கால இடைவெளிக்குப் பிறகு, பூட்டப்பட்ட பெட்டி ஒன்றிற்குள் தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 20 ஃப்ராங்க் தங்க நாணயங்கள் 480, 10 ஃப்ராங்க் தங்க நாணயங்கள் 50 மற்றும் ஒரு 100 ஃப்ராங்க் தங்க நாணயம் ஆகியவை கிடைத்துள்ளன.மேலும் பல புராதான கலைப் பொருள்களும் அந்த வீட்டிலிருந்து கிடைத்துள்ளன.ஆக, அந்த வீட்டில் கிடைத்த புதையலின் மொத்த மதிப்பு 650,000 யூரோக்கள் என கணக்கிடப்பட்டது.இந்நிலையில், தற்போது அந்த புதையல் ஏலம் விடப்பட்டுள்ளது. அவை எவ்வளவு யூரோக்களுக்கு ஏலம் போயுள்ளன தெரியுமா?772,955 யூரோக்களுக்கு!அந்தப் பணத்தைக் கொண்டு நகராட்சி, அந்நகரிலுள்ள ஹொட்டல் ஒன்றைப் புதுப்பித்து தங்கும் வசதி கொண்ட ஹொட்டலாக மாற்ற உள்ளதுடன், நகரின் முன்னேற்றத்துக்காக பல்வேறு நலப்பணிகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையில், அந்த வீட்டை 130,000 யூரோக்களுக்கு விற்றவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை!  


Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 22 (14:22 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 22 (14:22 pm )
Testing centres