இந்தியா

 • All News
 • திருப்பூர் மாநகராட்சி ஆணையர் ஆஜராக உத்தரவு!
திருப்பூர் மாநகராட்சி ஆணையர் ஆஜராக உத்தரவு!
Jan 07
திருப்பூர் மாநகராட்சி ஆணையர் ஆஜராக உத்தரவு!
திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி கொடிக் கம்பங்களை அகற்ற கோரிய வழக்கில் திருப்பூர் மாநகராட்சி ஆணையர், நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து முன்னேற்ற கழகத் தலைவர் கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், இந்து கோட்பாடுகளுடன் அரசியல் கட்சியாக செயல்பட்டு வரும் இந்து முன்னணி திருப்பூர் முழுவதும் தங்கள் கட்சியின் கொடிக்கம்பங்களை அமைத்துள்ளனர்.விதிமுறைகளுக்கு முரணாகவும், சட்ட விரோதமாகவும் நடைபாதைகளில் இந்தக் கொடிக்கம்பங்களை நட்டுள்ளனர். பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் திருப்பூர் முழுவதும் 500- க்கும் மேற்பட்ட கொடிக் கம்பங்களை எந்த அனுமதியும் பெறாமல் இந்து முன்னணியினர் வைத்துள்ளனர். இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே, சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், உத்தரவிற்கு முரணாக திருப்பூரில் இந்து முன்னணியினர் கொடிக்கம்பங்களை வைத்துள்ளனர். இந்தக் கொடிக்கம்பங்களை அகற்றக்கோரி கடந்த ஜூன் 12-ல் மாவட்ட ஆட்சியரிடமும், மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, திருப்பூரில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள இந்து முன்னணி கொடிக்கம்பங்களை அகற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, திருப்பூரில் சட்டவிரோதமாக எவ்வளவு கொடிக்கம்பங்கள் உள்ளன? எவ்வளவு அகற்றப்பட்டுள்ளது? என்பது குறித்த முழு விவர அறிக்கையுடன் பிப்ரவரி 10- ஆம் தேதியன்று திருப்பூர் மாநகராட்சி ஆணையர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May25

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேத

May31

தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட

Jan30

சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் இர

May19

மத்திய அரசு அறிவித்துள்ள சலுகைகள் போதுமானதல்ல என்றும

May27

சென்னை: சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி க

Feb05

10 கோடி ரூபா அபராத தொகையை செலுத்தாவிட்டால், சசிகலா கூடுத

May31

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதகரத்தில் விசா பி

Jan22

துக்ளக் பொன்விழாவில் நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறி

Jan10

சேலத்தில் சிவப்பு பாதரசம் என்ற பெயரில் பல கோடி ரூபாய்

Jun05

முதல்-அமைச்சர் வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈ

Jan28

இந்திய மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட

Jan23

நாட்டையே உலுக்கிய நிர்பயா பலாத்கார கொலை வழக்கின் குற்ற

May20

திருவள்ளூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோ

Feb07

சினிமா நடிகர்கள் போன்று மணமகன் வேண்டும் என நினைக்கும்

May21

ஜூன் 1-ம் தேதி இயக்கப்படவுள்ள 200 சிறப்பு ரயில்களுக்கா

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (07:27 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (07:27 am )
Testing centres