ஈராக்கில் உள்ள தூதரகம் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டது குறித்து அமெரிக்காவும், ஈராக்கும் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு ஈராக் பகுதியில் உள்ள இர்பில் நகரில் புதிதாக நிறுவப்பட்ட அமெரிக்க தூதரகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது நேற்று ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. 12-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டன.
இதில் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. தூதரகத்துக்கு அருகில் உள்ள டெலிவிஷன் அலுவலக கட்டிடமும் பலத்த சேதமானது. இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
பக்கத்து நாடான ஈரானில் இருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு அமெரிக்காவும், ஈராக்கும் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
மிருகத்தனமான இந்த தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இந்த ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழ
சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கொரோனா காப
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மூலம் சிங்கப்பூர் வந்
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணி
சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர
இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது நலனை அடைவதற்கு ரஷ
இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியு
உக்ரைனில், ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர
மோட்டார் சைக்கிள் வரும் நபர்கள் தங்கச் சங்கிலியை அறுத
ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரை உக்ரைன் பொதுமக்கள் அடித்து தா
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலானது ஒரு மனித சோகம் என
புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுச
உக்ரைன் ரஷ்யா போர் நிலைமை தீவிரமடையும் பட்சத்தில், பு
ரஷ்யா உக்ரைன் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நில
