போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை கோடரி தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.
அதிகாரியின் தலைப்பகுதிக்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கழுத்துப் பகுதிக்கு விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு காயமடைந்துள்ளார். இந்நிலையில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பலாந்தோட்டை நகரின் மையப்பகுதியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்த சந்தேக நபர் பொலிஸ் அதிகாரியை கோடரியால் தாக்கிய பின்னர் விஷம் அருந்தியுள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபரும் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சந்தேக நபர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி அம்பலாந்தோட்டை பொலிஸாரினால் குடிபோதையில் வாகனம் செலுத்தியமைக்கான குறித்த நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் கோபமுற்ற சந்தேகநபர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு முழுமை
மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸா
சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்ல முற்பட்ட இள
அரசாங்கத்தையும், எதிர்க்கட்சியினையும் மக்கள் நிராகர
நாட்டின் புதிய பிரதமருக்கு உணவு பரிமாறுவதற்கு தயார
கோவிட் நிதியத்தில் உள்ள 1.8 பில்லியன் ரூபா நிதியை அத்தி
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா – சாமிம
வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் 2 கொரோனா தொற்றாளர
அத்தியாவசியமான 383 மருந்துகளில் 92 மருந்துகளுக்கு தட்டு
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற
வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று (05) இடம்
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 145 பேர் உயிரிழந
களுவாஞ்சிக்குடி தனிமைபடுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி
இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டு
