சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்ல முற்பட்ட இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி ஆவணங்களைத் தயாரித்து சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முற்பட்ட இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தாலிக்கான போலி வதிவிட வீசாவைப் பயன்படுத்தி டோஹா ஊடாக இத்தாலி செல்ல முற்பட்ட போதே, குறித்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் எல்லை கண்காணிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் சிலாபம் பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 655 என்ற விமானத்தில் பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அவர் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக குடிவரவு பிரிவிற்கு சென்று, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த குடிவரவு – குடியகழ்வு அதிகாரியிடம் அதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
இந்நிலையில் இத்தாலிக்கான வதிவிட வீசா சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்டமையால் குறித்த அதிகாரி அதனை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார்.
வவுனியா ஓமந்தை பகுதியில் வவுனியா பிரதேச ஊடகவியலாளர்க
வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம் உயிர் ஆபத்த
கம்பஹாவிலுள்ள மேலதிக வகுப்பு நிறுவனத்தின் பெண்கள் கழ
கூட்டு ஒப்பந்தத்தை இரத்துசெய்தால் அது தொழிலாளர்களுக
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் உள்ள கிரான்குளத
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்க
காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினைய
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை
ஐக்கிய நாடுகள் சபையின் 9-வது பொதுச்செயலாளராக போர்ச்சு
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக யாழ். போதனா வைத்தியசால
இலங்கைக்கு தொடர்ந்தும் கடன் வழங்குவதை தவிர்ப்பது குற
சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னு
வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுக
