இந்தியாவில் பிச்சை எடுத்து கொண்டிருந்த இளம்பெண் தற்போது ஒரு நிறுவனத்திற்கு முதலாளியாக மாறியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னாவில் வசித்து வரும் ஜோதி என்ற சிறுமி தனது சிறு வயதில் இருந்தே ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அவரது பெற்றோர்கள் இறந்துவிட்ட நிலையில் அவரோடு ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கும் பெண் ஒருவர் தாய் இடத்தில் இருந்து ஜோதியை வளர்த்து வந்தார்.
இதற்கிடையில் அவரை வளர்த்து வந்த பெண் ஒரு நாள் மரணித்து போக ஜோதி மீண்டும் யாரும் இல்லாத சூழ்நிலையில் தள்ளப்பட்டார். அப்போது நடந்த நிகழ்வு ஒன்று அவரது வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
அதாவது பாட்னாவை சேர்ந்த ராம்பே பவுண்டேஷன் என்ற பிரபல நிறுவனம் ஒன்று ஜோதியை தத்தெடுத்து படிக்க வைத்தது. ஜோதி தனது படிப்பை முடித்த நிலையில் உபேந்திரா மராத்தி இன்ஸ்டியூட்டில் மதுபானி என்ற பெயிண்டிங் கலையையும் கற்றுக்கொண்டார்.
ஜோதிக்கு தொழில் செய்ய ஆர்வம் ஏற்பட்டதால் தனி பெண்ணாக ஒரு கஃபேடெரியாவை தொடங்கி தற்போது வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அதேவேளையில் நேரம் கிடைக்கும் போது தனது படிப்பையும் தொடர்ந்து வருகிறார். இவரது வாழ்க்கை தற்போது பலருக்கு பாடமாக அமைந்துள்ளது.
அதோடு 19 வயதில் தனி பெண்ணாக இருந்து கடை மற்றும் படிப்பு இரண்டையும் சரியாக பேலன்ஸ் செய்து வருவது பலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் அ
இந்தியா கடந்த 1947 ஆகஸ்டு 15-ம் நாள் சுதந்திரம் அடைந்தது. இ
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்த
ஒன்றிய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டத்தை கிண்டல் ச
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
கர்நாடக மாநில சட்டப்பேரவையில், சட்டப்பேரவை சம்பளம
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவி
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்களில், அரசுப் பள்ளி ம
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்ப
உத்தர பிரதேச மாநில அரசு 4 லட்சம் பேருக்கு வேலை வழங்கியத
75-வது சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் எர்பைய
இந்தியாவை தலிபான்களை போல ஆக்க நாங்கள் உங்களை அனுமதிக்
கொரோனா தொற்று அலைகள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவ
டெல்லியில் தடையை மீறி மக்கள் பட்டாசு வெடித்த நிலையில்
முதல்-மந்திரி ஹிமந்த விஸ்வ சா்மா குவாஹாட்டியில் செய்த
