கண்டி, கட்டுகஸ்தோட்டையில் இளைஞர் ஒருவர் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 30 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணி தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த இளைஞனின் தந்தையின் சகோதரனே இக்கொலையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (30) காலை காணியின் எல்லை தொடர்பில் உயிரிழந்த நபருக்கும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சந்தேகநபர் நேற்று மதியம் கொலையுண்ட இளைஞரின் வீட்டிற்கு மரம் வெட்டும் இயந்திரத்துடன் சென்று குறித்த இளைஞரை கால் மற்றும் கையை வெட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், பிரதேசவாசிகள் இளைஞனை பேராதனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த கொலை தொடர்பாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட
கொழும்பிலிருந்து பொதி சேவை மூலம் போதைப்பொருள் வர்த்த
சமூக பாதுகாப்பு சபை வட மாகாணத்திற்கான விருது வழங்கும்
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் பகுதிகள் உடன் அ
கதிர்காமம் - தம்பே வீதியில்
அம்பாறை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து காவல்த்த கொவிட் தொற்று நிலைமை காரணமாக இம்முறை வீடுகளில் இருந்த முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து ஆதிசக்தியாகக் காட் மேல் மாகாணத்தில் புகை பரிசோதனையில் தோல்வியடைந்த பல வா மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மருதமடு ஹொரணை, மல் பெரிகம பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டிற்கு தேவையான சீனி மற்ற உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற் ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக் யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தூக்கிட்ட
