ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் ராணுவம் தனது பணிகளை செய்து வருவதால் நாட்டுமக்கள் யாரும் பதட்டம் அடைய வேண்டாம். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.
முன்னதாக ரஷியா போர் தொடுப்பதற்கு முன்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, ‘உக்ரைன் மக்களும், அரசும் அமைதியை தான் விரும்புகிறது. ஆனால் நாங்கள் தாக்கப்பட்டால் எங்களது நாடு, சுதந்திரம், வாழ்க்கை மற்றும் எங்களது குழந்தைகளின் வாழ்க்கை ஆகியவற்றை காக்க போராடுவோம்.
நீங்கள் எங்களை தாக்கும் போது எங்களது முகத்தை தான் பார்ப்பீர்கள். முதுகை அல்ல’ என்று தெரிவித்து இருந்தார். மேலும் அவர் கூறும் போது, ‘நீங்கள் (ரஷியா) உக்ரைன் நாட்டு மக்களுக்கு சுதந்திரத்தை அளிக்க போவதாக தெரிவித்துள்ளீர்கள். ஆனால் உக்ரைன் மக்கள் சுதந்திரமாகத்தான் இங்கு இருக்கிறார்கள்’ என்றார்.
இதற்கிடையே ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இந்தியா இதில் தலையிட்டு போரை நிறுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
.
500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீ
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந
சுமார் 30,000 துருப்புகள் மற்றும் 50 போர்க்கப்பல்களுடன் ரஷ
உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களை பொதுவெளி
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்
உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்
கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் கா
உக்ரைனில், ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர
உக்ரை மீது மூன்றாவது நாளாகவும் ரஷ்யா தாக்குதல் நடத
ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் திட்டமிட்டபடி நடந்துவரு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில், ரஷ்யாவிற்க
ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக
Poissy (Yvelines) இல் நேற்றுஇம்மானுவல் மக்ரோனின்(Emmanuel Macron) தேர்தல் வ
கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தானில் 33 அடி ஆழமுள்ள கி
