இந்தியா

  • All News
  • பொங்கல் பரிசுத்தொகை ரொக்கம் ரூ.1,000 ரேஷன் கடைகளில் 9ம் தேதி முதல் 12ம் தேதிக்குள் வழங்க உத்தரவு
பொங்கல் பரிசுத்தொகை ரொக்கம் ரூ.1,000 ரேஷன் கடைகளில் 9ம் தேதி முதல் 12ம் தேதிக்குள் வழங்க உத்தரவு
Jan 03
பொங்கல் பரிசுத்தொகை ரொக்கம் ரூ.1,000 ரேஷன் கடைகளில் 9ம் தேதி முதல் 12ம் தேதிக்குள் வழங்க உத்தரவு
சென்னை: பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரொக்கம் 1,000 ரூபாய் ரேஷன் கடைகளில் 9ம் தேதி முதல் 12ம் தேதிக்குள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. விடப்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் 1000 ரூபாய் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 2 அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூபாய் 1000 ரொக்க பணம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 26ம் தேதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து 29ம் தேதி ரூபாய் 1000 பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை, தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

இதன்மூலம் 2.5 கோடி அரிசி அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்காக ரூபாய் 2 ஆயிரத்து 363 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, பொங்கல் பரிசு தொகுப்பிற்கு தேவையான அனைத்து பொருட்களும் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான தேதியை கடந்த 2ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த 27 மற்றும் 30ம் தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிவடைந்ததையடுத்து தமிழகம் முழுவதும் 2.5 கோடி ரே‌‌ஷன் அட்டை தாரர்களுக்கு தேவையான பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ரே‌‌ஷன் கடைகளுக்கு தேவையான பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவைகளை பாக்கெட் போடும் பணி நடந்து வருகிறது.

இந்த பணிகள் முடியும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பணம் ரூபாய் 1000த்தை இரண்டு 500 ரூபாய் தாள்களாக வழங்கப்பட உள்ளது. அரசு உத்தரவு வந்ததும் ஒவ்வொரு ரே‌‌ஷன் கடைகளுக்கும் இவை அனுப்பி வைக்கப்படும். அநேகமாக பொங்கல் தொகுப்பு பரிசுகள் வருகிற 9ம் தேதி முதல் 12ம் தேதிக்குள் வழங்க அரசுஉத்தரவிடப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் நெரிசல் இன்றி பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளில் சுழற்சி முறையில், தெருக்கள் அல்லது பகுதி வாரியாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தெருக்களுக்கு எப்போது பணம் பொருட்கள் வழங்கப்படும் என்ற பட்டியல் ரே‌‌ஷன் கடைகளில் எழுதி ஒட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan10

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்

Jan25

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றும

May28

கொரோனா வைரஸ் பாதிப்பின் ஊரடங்கு காலக்கெடு வருகிற 31-ந்த

Jan03

புதுச்சேரி: புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள அடகுக்கட

Jun12

 தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்து வந்த பீலா ராஜ

Feb02

அதிமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா முன்ன

May23

திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியை இன்று காலை போ

Jan10

சேலத்தில் சிவப்பு பாதரசம் என்ற பெயரில் பல கோடி ரூபாய்

Jun09

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி நடைபெற இருப

Jun02

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி திரிவேந்திரசி

Feb05

10 கோடி ரூபா அபராத தொகையை செலுத்தாவிட்டால், சசிகலா கூடுத

Jan14

உள்ளாட்சித் தேர்தல் முடிவு அறிவிப்பை தொடர்ந்து தமிழகத

Jan07

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.01

Jan26

இந்தியா- பிறேஸில் ஆகிய நாடுகளுக்குடையே எண்ணெய், எரிவாய

Jan04

குடியுரிமைக்கு எதிராக நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (18:02 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (18:02 pm )
Testing centres