மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காங்கேயனோடை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காங்கேயனோடையில் இருவருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் ஒருவர் மற்றவரைத் தாக்கியுள்ளார்.
இதன்போது படுகாயமடைந்த நபர் காத்தான்குடி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காங்கேயனோடை தடாகத்திற்கு அருகில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் காங்கேயனோடை பகுதியைச் சேர்ந்த 43 வயதான லெப்பை மொஹமட் இல்பான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவ இடத்தை பார்வையிட்ட மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்குச் சென்று உயிரிழந்தவரின் சடலத்தைப் பார்வையிட்டுள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், பிரேதப் பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறியால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் இதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர் எனவும் அவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காணாமல்போன நிலையில் தேடப்பட்டு வந்த, வாழைச்சேனை பொலிஸ
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பார்வீத
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலன்னறுவை - க
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்த
மட்டக்களப்பில் 17 வயது சிறுமி ஒருவர் நஞ்சு அருந்தி நேற்
மட்டக்களப்பு - கொழும்பு வீதி ஊறணி சந்தியில் மோட்டார் ச
மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கடலில் மீன் பிடிக்கச் ச
மட்டக்களப்பு மாவட்ட சுதந்திர ஊடகவியலாளர் புண்ணியமூர
மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்றில் முதல் தடவையாக ப
மட்டக்களப்பில் அமைந்துள்ள மாதா ஆலய கட்டிடத்தில் அதிச
மட்டகளப்பு ஏறாவூர் காவல்துறை பிரிவில் பயங்கரவாத தடைச
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பலத
நாங்கள் இந்தியாவின் முகவர்கள் என சித்தரிக்கின்ற தமிழ
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதானவீதி கல்லடி விபுலான