இந்தியா

 • All News
 • புத்தாண்டில் 316 கோடிக்கு மதுவிற்பனை:
புத்தாண்டில் 316 கோடிக்கு மதுவிற்பனை:
Jan 03
புத்தாண்டில் 316 கோடிக்கு மதுவிற்பனை:
சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரூ.316 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. இதில், மதுரை மண்டலம் முதல் இடம் பிடித்துள்ளது என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதன் மூலம் நாள் தோறும் ரூ.70 முதல் ரூ.80 கோடி வரையில் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறைகளில் டாஸ்மாக் முக்கிய பங்கை வகிக்கிறது. சாதாரண நாட்களை தவிர தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற முக்கியமான விடுமுறை நாட்களில் விற்பனை அதிகரித்து காணப்படும். இதுபோன்ற விழா நாட்களில் மதுவிற்பனை அதிகரிக்கும் என்பதால் முன்பாகவே 10 முதல் 15 நாட்களுக்கு தேவையான மதுபான வகைகள் இருப்பு வைக்கப்படும். அந்தவகையில், 2020 ஆங்கில புத்தாண்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி வழக்கம் போல் மது விற்பனை அதிகரிக்கும் என்று கூறப்பட்டாலும் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 27 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.

எனவே, டாஸ்மாக் கடைகள் விடுமுறை விடப்படுவதால் புத்தாண்டிற்கு மதுவிற்பனை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மதுவிற்பனை அதிகரித்தே காணப்பட்டது. அதன்படி, கடந்த 31.12.2019 மற்றும் 1.1.2020 ஆகிய 2 நாட்களில் மட்டும் ரூ.316 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.குறிப்பாக, 31.12.2019 அன்று சென்னை மண்டலத்தில் ரூ.38.12 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.38.52 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.29.50 கோடியும், மதுரை மண்டலத்தில் 39.46 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ. 36.30 கோடியும் என மொத்தமாக ரூ.181.40 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.இதேபோல் புத்தாண்டு அன்று 1.1.2020 அன்று சென்னை மண்டலத்தில் ரூ.26.40 கோடியும், திருச்சி ரூ.27.02 கோடி, சேலம் ரூ.25.56 கோடி, மதுரை ரூ.28.54 கோடி, கோவை ரூ.26 கோடியும் என மொத்தம் ரூ.134 கோடிக்கும் மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த 2 நாட்களில் மொத்தமாக ரூ.316 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.

அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் இரண்டு நாட்களில் ரூ.69 கோடிக்கு மதுவிற்பனை ஆகியுள்ளது. 2வது இடத்தில் திருச்சி மண்டலம் உள்ளது. இங்கு ரூ.68 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மது விற்பனை ரூ.78 கோடி அதிகம் ஆகும்.நேற்று வாக்கு எண்ணிக்கை என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால், கடந்த 1ம் தேதியே பலரும் மதுபானங்களை வாங்கி இருப்பு வைத்ததும் விற்பனை அதிகரித்ததற்கு முக்கிய காரணம் என டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திருவனந்தபுரம்: புத்தாண்டு தினத்தில் கேரளாவில் மது விற்பனை சுமார் ரூ.70 கோடியை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு முதல் தொடங்கியது. அன்றைய தினம் கேரளாவில் மது விற்பனை ரூ.68.57 கோடியை எட்டியது. இது கேரளாவில் புதிய சாதனை. கடந்தாண்டு புத்தாண்டு தினத்தில், கேரளாவில் ரூ.63 கோடிக்கு மது விற்பனையானது. கடந்த கிறிஸ்துமஸ் தினத்திலும் இங்கு மது விற்பனை கடந்த ஆண்டைவிட 8 சதவீதம் அதிகம் விற்பனையானது. திருவனந்தபுரம் பவர் ஹவுஸ் ரோட்டில் உள்ள மதுக்கடையில் மட்டும், புத்தாண்டு தினத்தில் ரூ.88 லட்சத்துக்கு மது விற்பனையானது. கேரளாவில் உள்ள மதுக்கடையில் ஒரே நாளில் ரூ.88 லட்சத்துக்கு மது விற்பனையானது இதுவே முதல் முறை. கிறிஸ்துமஸ் விடுமுறை தொடங்கியது முதல் புத்தாண்டு முடியும் வரையிலான 10 நாட்களில் கேரளாவில் மொத்தம் ரூ.522 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ரூ.512 கோடிக்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May12

டெல்லி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதை எதிர்த்து தா

Jan06

சொர்க்கவாசல் திறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவ

May21

ஜூன் 1-ம் தேதி இயக்கப்படவுள்ள 200 சிறப்பு ரயில்களுக்கா

Feb04

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக கருத்

Feb03

சந்தனக் கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்ட சுமார், 15 ஆண்டுகள

May31

புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பிராந்தியங்களில் ஆண்டுதோ

May15

மதுக்கடைகளை மூடும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீத

Feb08

டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்த தேர்தலுக்கு

Feb19

புதுச்சேரியிலிருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு

Jan10

பெங்களூரில் கடந்த 7 ஆம் தேதி தீவிரவாதிகளுடன் தொடர்பில்

Jun06

நமது நாட்டில் கொரோனா தொற்றினை கண்டுபிடிக்க பயன்படும்

May26

புதுடெல்லி: 

 

தென்கிழக்கு டெல்லியின் துக்ள

May29

உலகில் பல வகையான மாவுப் பூச்சிகள் உள்ளன. அவற்றில் ஒரு வ

Jun01

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 15ம் தேதி தொடங்க இருப்பதை

May23

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அண

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (08:37 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (08:37 am )
Testing centres