இந்தியா

  • All News
  • குடியுரிமை திருத்த சட்டத்தை அதிமுக ஆதரித்ததால் உள்ளாட்சி தேர்தலில் தோல்வி ஏற்பட்டுள்ளது : அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா
குடியுரிமை திருத்த சட்டத்தை அதிமுக ஆதரித்ததால் உள்ளாட்சி தேர்தலில் தோல்வி ஏற்பட்டுள்ளது : அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா
Jan 03
குடியுரிமை திருத்த சட்டத்தை அதிமுக ஆதரித்ததால் உள்ளாட்சி தேர்தலில் தோல்வி ஏற்பட்டுள்ளது : அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா
சென்னை : குடியுரிமை திருத்த சட்டத்தை அதிமுக ஆதரித்ததால் உள்ளாட்சி தேர்தலில் தோல்வி ஏற்பட்டுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக முக்கிய பிரமுகர்களின் வாரிசுகள் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளனர். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் 2வது வார்டில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவின் மகள் ராவியத்துல் அதபியா தோல்வியுற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்புலெட்சுமி 1,343 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மொத்தம் பதிவான வாக்குகள் 4,505. இதில் ராவியத்துல் அதபியா 1,062 வாக்குகளும், சுப்புலெட்சுமி 2,405 வாக்குகளும் பெற்றனர்.

ராவியத்துல் அதபியா டெபாசிட் இழந்துள்ளார். அதே போல மண்டபம் ஒன்றிய உறுப்பினர் 6-வது வார்டில் போட்டியிடட அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியை திமுக வேட்பாளர் தவ்பீக் அலி தோற்கடித்தார்.இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் மகன், மகள் தோல்வியுற்றதற்கான காரணம் பற்றி அன்வர்ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டத்தை அதிமுக ஆதரித்ததால் உள்ளாட்சி தேர்தலில் தோல்வி ஏற்பட்டுள்ளது என்பதை கூறினார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அரசுக்கு எதிராக சிறுபான்மையினர் வாக்களித்துள்ளனர் என்று கூறிய அவர், தேசிய குடியுரிமை பதிவேடு நாடு முழுவதும் அமலாகும் என்ற அச்சம் சிறுபான்மையினர் மத்தியில் நிலவுகிறது என்றும் சிறுபான்மையினர் அச்சப்படுவதால் அதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்யும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

தேசிய குடியுரிமை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு சொல்லும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். அசாமில் மட்டுமே அமல் என பாஜக கூறியதால்தான் நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரவு தந்தது என்பதையும் அன்வர் ராஜா நினைவு கூர்ந்தார். மேலும் அன்வர் ராஜா கூறுகையில், “அதிமுகவுக்கு வாக்கு சதவிகிதம் எங்களுக்கு அதிகரித்துள்ளது. அதிமுகவில் இருந்து அந்த வார்டுகளில் யாரும் போட்டியிட முன் வராததால், தோல்வி கிடைக்கும் என்று தெரிந்தும், தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதால், எனது மகள் மற்றும் மகனை நிறுத்தி வைத்தேன்“.என்று கூறியுள்ளார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb16

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அறுதிப் பெரும்

Jun02

 நாட்டில் கொரோனாவின் தீவிர பரவலுக்கு ஆளான மாநிலங்கள

May26

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும்

May23

திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியை இன்று காலை போ

May29

தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் 8 மாவட்டங்களில் ப

May20

சாலை விபத்தில் சிக்கி பலியானவர்களின் சடலங்களுடன் காய

May20

பீகாரில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி

Jan06

சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் அமைந்துள்ள சென்னை த

Jun05

தமிழகத்தில் மண்எண்ணெய் ஊற்றி மாமியாரை எரித்து கொன்ற ம

May25

சிங்கம்பட்டி ஜமீன் இறப்பிற்கு நடிகர் சிவகார்த்திகேயன

Jan03

சென்னை: பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரொக்கம் 1,000 ரூபாய் ரேஷன

Feb06

வருமானவரி ஏய்ப்பு புகார் தொடா்பாக நடிகா் விஜய் வீடுகள

May08

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்திகாப்பான் கோவில்

Jan24

இந்திய குடியரசு தினம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) க

Jan14

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம

Share News

Sri Lanka

  • Active Cases

    573

     
  • Total Confirmed

    863

     
  • Cured/Discharged

    153

     
  • Total DEATHS

    9

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (08:41 am )
Testing centres

World

  • Active Cases

    50575

     
  • Total Confirmed

    82285

  • Cured/Discharged

    43253

     
  • Total DEATHS

    14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (08:41 am )
Testing centres