ஆளும் கட்சி அராஜகம் செய்யாமல் நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும் என சசிகலா கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்திலுள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின், திமுக எம்எல்ஏ உதயநிதி, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், அமைச்சர் கே.என்.நேரு , பொன்முடி , துரைமுருகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இன்று வாக்களித்தனர். அத்துடன் நடிகர் விஜய், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரை பிரபலங்களும் தங்கள் வாக்கினை செலுத்தினர்.
இந்நிலையில் தியாகராயநகர் வித்யோதயா பள்ளி வாக்குச் சாவடியில் உள்ள வாக்கு மையத்தில் வி.கே. சசிகலா இன்று தனது வாக்கினை பதிவு செய்தார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ஜெயலலிதா இல்லாமல் முதல் முறையாக வாக்களிக்கிறேன். இது மிகவும் கஷ்டமான சூழலாக உள்ளது. ஆளும் கட்சியின் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். அராஜகம் செய்யக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். அத்துடன் காவல்துறையினரும், நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்திய சசிகலா , அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தால் மட்டும் போதாது ; நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங
டெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி டிரா
முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அவைத்தலைவருமான இ.மதுசூத
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முக்கிய கட்டத நாடு முழுவதும்
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 28,699 பேருக்கு கொரோனா வைர இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்க தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் வைர வி ஒன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்பவர் கோவையில் 76 மாத பஞ்சப்படி உயர்வு வழங்க வலியுறுத்தி, ஓய்கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்
