More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் அதி நவீன இராணுவ விமானம்!
இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் அதி நவீன இராணுவ விமானம்!
Feb 19
இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் அதி நவீன இராணுவ விமானம்!

அமெரிக்க நிறுவனமான டெக்ஸ்ட்ரோன் ஏவியேஷன்(Textron Aviation) தனது புதிய தயாரிப்பான Beechcraft King Air 360ER விமானத்திற்கான $11 மில்லியன் உடன்படிக்கையை இலங்கைக்கு வழங்கியுள்ளது.



இந்த விமானம் வெளிநாட்டு இராணுவ விற்பனை உடன்படிக்கையின் மூலம் இலங்கைக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



அத்துடன் அதன் தயாரிப்பு 2025 செப்டம்பருக்குள் நிறைவுசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



தயாரிப்புக்கு பின்னர் இந்த விமானம் அமெரிக்க இராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும், அது இலங்கை விமானப்படைக்கு வழங்குவதற்கு முன்னர் உணரிகள்( sensors) நிறுவப்படும் என்று டிஃபென்ஸ் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.



ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட விமானத்திற்கான பறக்கும் அனுபவத்தை மேம்படுத்தும் புதுமையான மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் இந்த விமானத்தில் இணைக்கப்பட்டுள்ளன.



46.6 அடி (14.2 மீட்டர்) நீளமும், 14.3 அடி (4.35 மீட்டர்) உயரமும் கொண்ட பீச்கிராஃப்ட் கிங் ஏர் 360ER (Beechcraft King Air 360ER) விமானம், விமானியின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,.



பயணிகள் மற்றும் சரக்குகளுக்கு இடமளிப்பதற்கும், விமான அவசர நோயாளர் காவு வாகனமாக செயற்படுவதற்கும் ஏற்ற நெகிழ்வான உட்புறங்களை வழங்கும் வகையில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.



விமானத்தில் மூன்று 14 அங்குல தொடுதிரை காட்சிகள், பல ஸ்கேன் வானிலை ரேடார் அமைப்பு, இரட்டை விமான மேலாண்மை அமைப்பு, கிராஃபிக் விமான திட்டமிடல் மற்றும் பணியாளர் எச்சரிக்கை அமைப்பு ஆகியவை அடங்குகின்றன.



2020 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஜெட் விமானம் அதிகபட்சமாக 3,345 கிலோமீட்டர்கள் (2078.4 மைல்கள்) 11 பேருடன் பயணிக்க முடியும்.



அத்துடன் இது மணிக்கு 560 கிலோமீட்டர்கள் (348 மைல்கள்) அதிகபட்ச வேகத்துடன் மற்றும் அதிகபட்ச 35,000 அடி (10,668 மீட்டர்). உயரத்தில் பறக்கக்கூடியது.



Textron Aviation 350ER அரச, இராணுவ மற்றும் வணிக நோக்கங்களுக்காகவும், வான்வழி ஆய்வு மற்றும் கண்காணிப்புக்காகவும் தயாரிக்கப்படுகிறது.



கடந்த ஆண்டு செப்டம்பரில், விமானம் ஐரோப்பிய விமானப் பாதுகாப்பு நிறுவனத்தின் சான்றிதழைப் பெற்றுக்கொண்டது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar09

தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்ப

Jan24

நாடுகடத்தலுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுத

May18

அண்டார்டிகாவில் அடுத்த 4 மாதங்களுக்கு சூரிய ஒளி தெரிய

Mar08

பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற்

Mar04

   இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்தியாவின் பிரப

Mar29

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்

Feb24

பூனை எப்போதுமே வீட்டில் சிங்கிளாக மட்டுமே இருக்கும்.

Mar11

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு காரணமாக இர

Feb09

நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வ

Feb04

இன்று அநேகரின் வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை இ

Feb06

உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்

Mar03

 

உச்சியில் கதிரவன் காட்சி கொடுக்கின்றான். வீதிய

Feb05

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்‍தை முன்னிட்டு அமெரி

Mar01

சிறிய கம்பியால் செய்யப்பட்ட ஹூக்கு எனப்படும் சேப்டி ப

Feb22

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சன்ங் (Julie J.Sung)

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 25 (09:07 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 25 (09:07 am )
Testing centres