நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
மாநகராட்சிகள் நிர்வாகத்தை எல்லாம் ஊழல் மயமாக்கிய அதிமுகவிற்கு, நகர்ப்புறத் தேர்தலில் நிற்கவே யோக்கியதை இல்லை என்பதுதான் உண்மை. மதுரைக்கு மோனோ இரயில் என்று சொன்னார்கள். எங்கே அது ஓடுகிறது?
முத்துராமலிங்கத் தேவர் சிலையருகே பறக்கும் பாலம் என்று கூட சொன்னார்கள். பறக்கும் பாலம் ஏதாவது இருக்கிறதா?
மதுரை வைகை நதியை, லண்டனின் தேம்ஸ் நதி போல மாற்றுவோம் என்றும், மதுரையை சிட்னி நகரைப் போல மாற்றுவோம் என்றும்; மதுரையை ரோம் நகரைப் போல மாற்றிவிடுவோம் என்றும், விஞ்ஞானி செல்லூர் ராஜூ சொன்னார். ஆனால் எதையும் செய்யவில்லை. இதுதான் அதிமுகவின் லட்சணம்.
தி.மு.க. ஆட்சிக்கு இன்னும் 27 அமாவாசைகள்தான் இருக்கிறது என்று புதிதாக ஜோசியம் சொல்லியிருக்கிறார்கள். அரசியல் அமாவாசைகள் யார் என்று தெரிந்துதான், அமைதிப்படையாக வாக்களித்து, அவர்களை இன்றைக்கு புலம்ப விட்டிருக்கிறார்கள் நம் தமிழக மக்கள்.
அ.தி.மு.க. அஸ்தமனத்தில் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்ற கட்சி, அதிமுக. சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்த கட்சி, அதிமுக. ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதே, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் மரண அடி கொடுத்த கட்சிதான் அதிமுக.
முதல்-அமைச்சர்
சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,30,982 தலைநகர் டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்க சபரிமலை அய்யப்பன் கோவிலில் விஷூ மற்றும் சித்திரை மாத சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அற நேற்று ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவருமான சண் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் ந கோவை தெற்கு தொகுதியில், தாமரை சின்ன பேட்ஜ் அணிந்து வந் போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்ப மருத்துவமனைகளில் நேற்று கொரோனா ஒத்திகை நடந்தது. டெல தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குப் படகில் கடத்த மு கொரோனா பரவலுக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி இன்ற
