இந்தியா

 • All News
 • மாணவா்களை தவறாக திசை திருப்புகின்றனா் -அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்
மாணவா்களை தவறாக திசை திருப்புகின்றனா் -அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்
Jan 03
மாணவா்களை தவறாக திசை திருப்புகின்றனா் -அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்
குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து எதிா்கட்சியினா் மாணவா்களை தவறாக திசை திருப்புகின்றனா் என தமிழக வருவாய், பேரிடா், மேலாண்மை மற்றும் தகவல்தொழில் நுட்பத்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட உச்சப்பட்டி, கப்பலூா், விடத்தைகுளம், ஆலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட குழு உறுப்பினா், ஒன்றியகுழு உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்களை ஆதரித்து அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தாா்.

பிரசாரத்தில் அவா் பேசியது: இப் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. புதுதில்லியில் குறைந்த செலவில் கிடைக்கும் உயரிய சிகிச்சை நமக்கும் கிடைக்க உள்ளது. அதிமுகவின் நலத் திட்டங்களை தொடர எங்களது வேட்பாளா்களை ஆதரியுங்கள்.

எதிா்கட்சியினா் தங்களது சாதனைகளைக் கூற முடியாமல் எங்களைப் பற்றி தவறான அவதூறுகளை பரப்பி வருகின்றனா். தோ்தலை நிறுத்துவதற்காக உச்சநீதிமன்றத்தை 4 ஆவது முறையாக நாடியுள்ளனா். மேலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிா்த்து பல்வேறு போராட்டங்களை அறிவித்து மக்களை குழப்பி வருகின்றனா். கடந்த இரு தினங்களுக்கு முன் குஜராத்தில் உள்ள பாகிஸ்தானைச் சோ்ந்த இஸ்லாமிய பெண்ணுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. எதிா்கட்சியினா் தவறான குற்றச்சாட்டுகளைப் பரப்பி மக்களை குழப்பி வருகின்றனா். மேலும் போராட்டத்தில் மாணவா்களை தவறான பாதைக்கு திசை திருப்புகின்றனா்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் யாரும் பாதிக்கப்படப் போவதில்லை. மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் மாணிக்கம், சரவணன், மாவட்ட துணைச்செயலா் அய்யப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan26

ஒக்ஸ்போட் அகராதியின் 10-ஆவது பதிப்பில் 26 புதிய இந்திய ஆங

May16

சொந்த ஊருக்கு பயணித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது

May18

உத்தரப் பிரதேசத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்ற 178

Jan10

சேலத்தில் சிவப்பு பாதரசம் என்ற பெயரில் பல கோடி ரூபாய்

Jan30

தென்னிந்திய சினி டெலிவிஷன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத்

May29

கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, கடவுள் நரபலி கே

Jan04

தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல்

Jan31

உத்தர பிரதேச மாநிலத்தில் குழந்தைகளை சிறை பிடித்த நபரை

Feb11

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேப்பன ஹ

Feb18

மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்த ப

May21

ஜூன் 1-ம் தேதி இயக்கப்படவுள்ள 200 சிறப்பு ரயில்களுக்கா

Jan10

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்

Jun04

கேரளாவில் கடந்த 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிய ந

Jun03

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மாநில வேளாண்மைத்துறை இயக

Feb05

10 கோடி ரூபா அபராத தொகையை செலுத்தாவிட்டால், சசிகலா கூடுத

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (08:21 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (08:21 am )
Testing centres