More forecasts: 30 day weather Orlando

மருத்துவம்

  • All News
  • பொடுகு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா?
பொடுகு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா?
Feb 14
பொடுகு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா?

பொதுவாக கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக அரிப்பு ஏற்படும். சிறுவர்கள், பெரியவர்கள் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது பொடுகு.



இதைக் கண்டுகொள்ளாமல் விட்டால், முடி உதிர்வு ஏற்படும். தலை வழுக்கையாகவும் வாய்ப்பு உண்டு. அதோடு சில சரும நோய்கள் உருவாகவும் இது வழிவகுக்கும்.



முகத்தில் பருக்கள் உருவாகலாம் .கழுத்திலும், காதின் பின்புறத்திலும் தோல் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்! எனவே இவற்றை ஆரம்பத்திலே நீக்குவது நல்லது. அந்தவகையில் தற்போது இதனை எப்படி போக்கலாம் என்பதை பார்ப்போம்.



வெந்தயத்தை தலைக்குதேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும். மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும். தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகுபிரச்னை நீங்கும்.



பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் ஊறவைத்து பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.



கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.



வேப்பிலை கொழுந்து துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும். துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.



வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகுதொல்லை நீங்கும்.



நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர பொடுகு நீங்கும்.



தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தல் பள பளக்கும்.



முதல்நாள் சாதம்வடித்த தண்ணீரை எடுத்துவைத்து, மறுநாள் அதை எடுத்து வைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். முட்டை வெள்ளைக் கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகுமறையும்.   






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar09

இந்திய உணவுகளில் பழங்கள் காய்கறிகள் என அனைத்தும் உடலு

Feb07

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்ல

Feb18

இன்று பலரும் அதிகம் வாங்கி சாப்பிடும் பப்பாளியிலும் த

Feb10

கொய்யாப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இ

Feb07

நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸினேற்றங்க

Mar15

இன்று பெரும்பாலான சிறுவர்கள், பெரியவர்கள் நகம் கடிப்ப

Mar01

மஞ்சள் உணவின் சுவையை அதிகரிப்பதுடன், உங்கள் தலைமுடியை

Mar22

இஞ்சி நிறைய நன்மைகளை தரக்கூடிய ஓர் அற்புமான மசாலா பொர

May04

பொதுவாக இளம் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்

Mar05

சில பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தை பெறுவதில் சிரமம்

Mar07

நீரிழிவு நோய் வந்துவிட்டால் உப்பு, சர்க்கரை முற்றிலும

May31

தொப்பை குறைய வேண்மென்றால், தண்ணீரை அதிகம் குடிக்க

Feb09

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, அதிக எடை அல்லது எடை குறைவாக இரு

Jan19

உடலில் ஏற்படும் சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எ

Feb22

உலகிலேயே இந்தியாதான் புகையிலை பொருட்களை தயாரிப்பதில

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 26 (03:08 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 26 (03:08 am )
Testing centres