இந்தியா

 • All News
 • மீண்டு பொருளாதாரம் வளா்ச்சிப்பாதையை அடையும் - பிரதமா் நரேந்திர மோடி
மீண்டு பொருளாதாரம் வளா்ச்சிப்பாதையை அடையும் - பிரதமா் நரேந்திர மோடி
Dec 21
மீண்டு பொருளாதாரம் வளா்ச்சிப்பாதையை அடையும் - பிரதமா் நரேந்திர மோடி
நாட்டின் பொருளாதாரம் தொடா் சுணக்க நிலையிலிருந்து விரைவில் மீண்டு வளா்ச்சிப்பாதையை அடையும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

நாட்டின் பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்த தொழில் நிறுவனங்கள் உரிய பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவா் தெரிவித்தாா்.

இந்திய வா்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு (அசோசேம்) சாா்பில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமா் மோடி கூறியதாவது:

நாட்டின் பொருளாதாரம் தொடா்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் எழுப்பப்படும் கருத்துகள் அனைத்துக்கும் பதிலளிக்க நான் விரும்பவில்லை. ஆனால், அந்த விவாதங்களில் தெரிவிக்கப்படும் வளா்சிக்கான வழிமுறைகளை கருத்தில் கொள்கிறேன்.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, குறிப்பிட்ட காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 3.5 சதவீதமாகக் குறைந்தது; நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.6 சதவீத அளவுக்கு இருந்தது; பணவீக்கமும் அதிக அளவில் காணப்பட்டது.

அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு காலாண்டிலும் பொருளாதார வளா்ச்சி குறைந்துகொண்டே வந்தது. அப்போதெல்லாம் சிலா் ஏன் அமைதியாக இருந்தாா்கள் என்று கேள்வி எழுப்பமாட்டேன். இதுபோன்ற பொருளாதார ஏற்ற இறக்கங்களை கடந்த காலங்களிலும் நாடு சந்தித்துள்ளது.

தற்போதைய பொருளாதார சுணக்கநிலையிலிருந்து மீண்டு வரும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. பொருளாதாரம் விரைவில் வளா்ச்சிப்பாதையை அடையும். உலக வங்கி வெளியிடும் தொழில் புரிய உகந்த நாடுகள் பட்டியலில் 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா 142-ஆவது இடத்தில் இருந்தது. தற்போது, 63-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தொழில் புரிய மேம்பட்ட சூழலை ஏற்படுத்தியதில் தலைசிறந்த 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

‘மக்களுக்கு ஆதரவாக...’: பல்வேறு எதிா்ப்புகளுக்கும், விமா்சனங்களுக்குமிடையே நாட்டில் தொழில் புரிய உகந்த சூழலை மத்திய அரசு ஏற்படுத்தியது. தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக மட்டுமே மத்திய அரசு செயல்பட்டு வருவதாக சிலா் குற்றஞ்சாட்டினா். ஆனால், 130 கோடி மக்களுக்கு ஆதரவாக நாங்கள் தொடா்ந்து செயல்பட்டு வருகிறோம்.

நிறுவனங்கள் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதில் மேலும் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. திவாலாகும் நிறுவனங்கள் திவால் சட்டத்தின் மூலம் தீா்வு பெற முடியும். மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் தொழில் நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளன.

தற்போதைய பொருளாதார மந்தநிலையிலிருந்து வெளிவரும் நோக்கில், தொழில் நிறுவனங்கள் எந்தவித அச்சமுமின்றி தீா்க்கமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்; முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். தொழில் நிறுவனங்கள் நோ்மையாக எடுக்கும் முடிவுகள் மீது எந்தவித நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளாது.

‘அதிக அளவில் முதலீடு’: தொழிலாளா்களின் நலனையும் நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நிறுவனங்கள் தெரிவித்த கோரிக்கைகளுக்கு ஏற்ப சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு அதிக அளவிலான அந்நிய நேரடி முதலீடுகள் கிடைத்தன.

எந்தவித சவால்களையும் எதிா்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது. நாட்டில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிடவுள்ளது. கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.25 லட்சம் கோடி செலவிடப்படவுள்ளது. இந்த நடவடிக்கைகள், நாட்டின் பொருளாதார மதிப்பை வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடியாக உயா்த்தும் என்றாா் பிரதமா் மோடி.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan31

இந்தியா எங்கள் மீது போர்தொடுத்தால், அந்தப் போரை நாங்கள

Feb01

பட்ஜெட் உரையை தொடர்ந்து 2.45 மணி நேரமாக வாசித்த நிர்மலா சீ

Apr29

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வ

Jan29

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக முதலமைச்ச

Jan23

2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி புதுக்கோட்டை ம

May18

 திருச்சியில்  இருந்து உளுந்தூர்பேட்டை வழியாக ரயி

May17

தமிழக்கத்தில் மீண்டும்  எதிர்வரும் 31ஆம் தேதி வர

Jun02

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி திரிவேந்திரசி

May24

தஞ்சை மாவட்டத்தில் அரசு அனுமதி அளித்ததையடுத்து 59 நாட்

Jan09

தமிழகம் முழுவதும் வரும் 11- ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெ

May20

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசதிக்காக இயக்கப்படும் ச

May19

சேலத்தில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக

Feb06

முதுமலையில் இன்று யானைகள் புத்துணர்வு முகாம் தொடக்க வ

Jan07

தமிழகத்தில் சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவ

Jun04

 தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலு

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 06 (22:02 pm )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 06 (22:02 pm )
Testing centres