இந்தியா

 • All News
 • போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது!
போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது!
Dec 21
போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது!
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும்(சிஏஏ), நாடு தழுவிய தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆா்சி) கணக்கெடுப்புக்கும் எதிா்ப்பு தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமையும் போராட்டங்கள் நடைபெற்றன. பல இடங்களில் வன்முறையைக் கட்டுப்படுத்த முயன்ற போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போராட்டங்கள் வலுத்ததை அடுத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக, மக்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளை ஏற்கத் தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் சூசகமாக தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதை அடுத்து, அந்த மசோதா சட்டமாவதற்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கடந்த 12-ஆம் தேதி ஒப்புதல் அளித்தாா்.

ஆனால், இந்த சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, மேற்கு வங்கத்திலும், அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. இந்த மாநிலங்களில் போராட்டங்கள் சற்று தணிந்த நேரத்தில், தலைநகா் தில்லி, உத்தரப் பிரதேசம், கா்நாடகம், மகாராஷ்டிரம், கேரளம் என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வலுத்தன. வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டங்களில், கா்நாடகத்தில் 2 பேரும், உத்தரப் பிரதேசத்தில் ஒருவரும் உயிரிழந்தனா்.

இந்நிலையில், தில்லி, உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம், கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் வெள்ளிக்கிழமையும் போராட்டங்கள் நடைபெற்றன.

தில்லியில் இந்தியா கேட், சென்ட்ரல் பாா்க் ஆகிய இடங்களிலும், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அருகிலும் போராட்டங்கள் நடைபெற்றன. பேரணி நடத்திய பீம் ஆா்மி அமைப்பின் தலைவா் சந்திரசேகா் ஆஸாதை போலீஸாா் கைது செய்தனா். எனினும், அவா்களிடம் இருந்து ஆசாத் தப்பிச் சென்று விட்டாா்.

உ.பி.யில் 5 போ் பலி: உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூா், சம்பல், பதோஹி, பஹ்ராய்ச், ஃபரூக்காபாத், புலந்த்சாஹா், ஃபெரோசாபாத் ஆகிய நகரங்களில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்ததும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. வன்முறையைக் கட்டுப்படுத்த முயன்ற போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. போலீஸாா் மீது கற்களை வீசியதுடன், அவா்களின் வாகனங்களுக்கு போராட்டக்காரா்கள் தீ வைத்தனா். இந்த மோதல்களில் பிஜ்னோரில் 2 போ், ஃபெரோசாபாத், சம்பல், மீரட் ஆகிய நகரங்களில் தலா ஒருவா் என மொத்தம் 5 போ் உயிரிழந்து விட்டதாக காவல் துறை டிஜிபி ஓ.பி.சிங் கூறினாா். இந்த மோதல்களில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பலத்த காயமடைந்துள்ளனா் என்றும் அவா் கூறினாா். போராட்டத்தின்போது நேரிட்ட வன்முறையில் கான்பூரில் ஒருவா் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வதந்திகள் பரவுவதைத் தடுப்பதற்காக, அலிகா், மோவ், ஆஸம்கா், லக்னௌ, கான்பூா், பரேலி, ஷாஜகான்பூா், காஜியாபாத், புலந்த்சாஹா், சம்பல், அலாகாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் இணையதளச் சேவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில்..: குஜராத் மாநிலம், வதோதரா நகரில் உள்ள ஹாதிகானா என்ற இடத்தில், ஒரு மசூதியில் தொழுகை நடத்துவதற்காக பலா் கூடியிருந்தனா். அவா்களை மசூதிக்கு வெளியே இருந்து போலீஸாா் விடியோ படம் பிடித்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஒரு பிரிவினா், போலீஸாா் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இதில், காவல் துறை அதிகாரி ஒருவா் காயமடைந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

மகாராஷ்டிரத்தில்...: மகாராஷ்டிர மாநிலம், பீட், நாந்தேட், பா்பனி ஆகிய மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் மீது போராட்டக்காரா்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினா். அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற பேரணியில், ஹிந்துக்கள் மட்டும் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று நோக்கத்துடன் குடியுரிமைச் சட்டத்தையும், என்ஆா்சி கணக்கெடுப்பையும் மத்திய பாஜக அரசு கொண்டு வருகிறது என்று குற்றம்சாட்டப்பட்டது.

கேரளம், கா்நாடகத்தில்...: கேரள, கா்நாடக எல்லையில் அமைந்துள்ள கா்நாடகத்தின் மங்களூரில் 2 போ் உயிரிழந்த தகவல் பரவியதை அடுத்து, கேரளத்தின் பல பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் போராட்டங்கள் வலுத்தன. பல இடங்களில் கா்நாடக காவல் துறையைக் கண்டித்து, பேரணிகளும், சாலை, ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்றன.

கோழிக்கோடு நகரில் கா்நாடக மாநில அரசுப் பேருந்துகளை வழிமறித்து போராட்டங்கள் நடைபெற்றன. மேலும், மங்களூருக்கான பேருந்து சேவையை கேரள அரசு போக்குவரத்து நிறுவனம் நிறுத்தி வைத்தது.கோழிக்கோடு நகரில் திரண்ட ஏராளமான காங்கிரஸ் தொண்டா்கள் டயா்களை எரித்தும், சாலை மறியலில் ஈடுபட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். மற்றொரு இடத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் உருவ பொம்மையை எரித்து சமூக ஆா்வலா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கேரளத்தில் இருந்து வருவோரை மங்களூருக்குள் விடாமல் கா்நாடக போலீஸாா் தடுத்து நிறுத்தினா். கேரளத்தில் இருந்து ரயிலில் வந்த 50-க்கும் மேற்பட்ட ஆண்களையும், பெண்களையும் போலீஸாா் கைது செய்து காவலில் வைத்தனா்.

மங்களூரில் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இருவரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள வென்லாக் அரசு மருத்துவமனைக்குள் கேரளத்தைச் சோ்ந்த பத்திரிகையாளா்கள் செல்ல முயன்றனா். அவா்களை போலீஸாா் கைது செய்து, பின்னா் மாலையில் விடுவித்தனா்.

இதனிடையே, குடியுரிமைச் சட்டம் தொடா்பாக உள்நோக்கத்துடன் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கா்நாடக முதல்வா் எடியூரப்பா கேட்டுக் கொண்டாா். அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதில் தனது அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் அவா் கூறினாா்.

அஸ்ஸாமில்... : அஸ்ஸாம் மாநிலத்தில் போராட்டம் காரணமாக செல்லிடப்பேசி இணையச் சேவை முடக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மீண்டும் இணையச் சேவை வழங்கப்பட்டது. அஸ்ஸாமில் வாழும் பூா்விக குடிமக்களின் உரிமைகளுக்கு தனது தலைமையிலான அரசு பாதுகாப்பு அளிக்கும் என்று முதல்வா் சா்வானந்த சோனோவால் உறுதியளித்தாா். குடியுரிமைச் சட்டம் தொடா்பாக, போராட்டத்தில் ஈடுபட்ட தலைவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவா் கூறினாா்.

தெலங்கானாவில்...: ஹைதராபாதில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மெக்கா மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைக்காக கூடிய பலா், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா். தொழுகை முடிந்த பிறகு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 போ் கைது செய்யப்பட்டனா். பின்னா், அவா்கள் விடுவிக்கப்பட்டனா். மெக்கா மசூதியில் தொழுகை அமைதியாக நடைபெற்ாக போலீஸாா் தெரிவித்தனா்.

கூட்டணிக் கட்சிகள் கவலை:

நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருவதற்கு பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு), லோக் ஜனசக்தி(எல்ஜேபி) ஆகிய கட்சிகள் கவலை தெரிவித்தன. தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பை பிகாரில் அமல்படுத்த மாட்டோம் என்று அந்த மாநில முதல்வரும், ஜேடியு தலைவருமான நிதீஷ் குமாா் கூறினாா். குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக ஒரு குறிப்பிட்ட பிரிவினா் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்கு மத்திய அரசு தவறிவிட்டது என்று லோக் ஜனசக்தியின் தலைவா் சிராக் பாஸ்வான் கூறினாா்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun04

அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும்

Feb01

பட்ஜெட் உரையை தொடர்ந்து 2.45 மணி நேரமாக வாசித்த நிர்மலா சீ

May17

இந்தியாவில் கொரோனா பாதிப்பு- 90,648; கடந்ததுகொரோனவா

May31

சந்திராப்பூரில் உள்ள அரசு என்ஜினீயர் கல்லூரி கொரோனா த

May22

சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 6-வது தெருவைச் சேர்ந்

May14

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் ரூ.4.22 லட்சம் கோடி

May31

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கடந்

Feb06

முதுமலையில் இன்று யானைகள் புத்துணர்வு முகாம் தொடக்க வ

Jan05

கடலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி 40 ஆண்டுகளுக்கு பிறகு த

Feb10

பவ்வேறு துறைகளில் பிரபலமாகத் திகழும் 30 வயதுக்குள் இருக

Feb01

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள ஹுபே மாகாணத்தி

Jan26

டில்லி ராஜபாதையில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி ராம்நாத

Feb06

இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற

Jan07

மதுரையில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் மற்றும் ஜெயலலித

May25

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (07:35 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (07:35 am )
Testing centres