இந்தியா

 • All News
 • டெல்லியில் தொடரும் வன்முறை-6 பேர் பலி
டெல்லியில் தொடரும் வன்முறை-6 பேர் பலி
Dec 21
டெல்லியில் தொடரும் வன்முறை-6 பேர் பலி
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, உத்தரப் பிரதேசத்தில் நேற்று நடந்த கலவரத்தில் 6 பேர் பலியாயினர். தலைநகர் டெல்லியில் போராட்டம் தொடர்கிறது. நாடு முழுவதும் 17 மாநிலங்களில் பதற்றம் நிலவுவதால், பாதுகாப்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்து 2014ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. உத்தரப் பிரதேசம், கர்நாடகாவில் நேற்று முன்தினம் நடந்த கலவரத்தில், 3 பேர் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியாயினர். இந்நிலையில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 13 மாவட்டங்களில் நேற்று மதியம் மசூதிகளில் தொழுகையை முடித்தபின், முஸ்லிம்கள் தடையை மீறி போராட்டம் நடத்தினர். அவர்கள் போலீசார் மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

பிஜ்னூர் பகுதியில் நடந்த கலவரத்தில் 2 பேர் பலியாயினர். சம்பல், பெரோசாபாத், மீரட் மற்றும் கான்பூர் நகரங்களில் நடந்த போராட்டத்தில் தலா ஒருவர் கொல்லப்பட்டார். உ.பி.யில் நடந்த கலவரத்தில் நேற்று மொத்தம் 6 பேர் பலியாயினர்.
ஆனால், போராட்டக்காரர்கள் மீது போலீசார் ஒரு குண்டு கூட சுடவில்லை என உ.பி. டிஜிபி ஓ.பி.சிங் கூறியுள்ளார். கல்வீச்சு தாக்குதலில் இவர்கள் இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. மற்றொரு போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘‘துப்பாக்கிச்சூடு நடத்திருந்தால், அது போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலாகதான் இருக்கும்,’’ என்றார். டெல்லி ஜூம்மா மசூதியில் இருந்து நேற்று பேரணி செல்ல பிம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தார். இந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அந்த தடையை மீறி, அவரது அமைப்பினர் நேற்று மதியம் தொழுகையை முடித்தபின், ஜூம்மா மசூதியில் போராட்டம் நடத்தினர். இதனால் தர்யாகன்ச் என்ற இடத்தில் அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அப்போது அவர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அவர் கோஷம் எழுப்பினார்.

டெல்லியில் நேற்று பல இடங்களில் போராட்டம் நடந்தது. மக்கள் தேசியக் கொடியுடனும், ‘அரசியல் சாசனத்தை காப்பாற்றுங்கள்’ என்ற பேனருடனும் பேரணி சென்றனர். வடகிழக்கு டெல்லியில் உள்ள சீலாம்பூர், சுந்தர் நக்ரி ஆகிய பகுதிகளில் போலீசாரும், துணை ராணுவ படையினரும் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். இங்கு 12 போலீஸ் நிலையம் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெல்கம் ஏரியா பகுதியில் உள்ள மசூதியில் நேற்று தொழுகையை முடித்த முஸ்லிம்கள் தடையை மீறி ஜப்ராபாத் பகுதியிலிருந்து ஷீலாம்பூர் நோக்கி கோஷங்கள் எழுப்பியபடி பேரணி சென்றனர். இந்த போராட்டங்களை டிரோன்கள் மூலம் போலீசார் கண்காணித்தனர். டெல்லி தர்யாகன்ச் பகுதியில் நேற்று மாலை சாலையின் நின்றிருந்த கார் ஒன்றுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதில் அந்த கார் முற்றிலும் எரிந்தது. ஜூம்மா மசூதி போராட்டத்துக்கு பிம் ஆர்மி தலைவர் அழைப்பு விடுத்திருந்ததால், ஜூம்மா மசூதி, சாவ்ரி பஜார், லல் குயிலா ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்கள் நேற்று மூடப்பட்டிருந்தன.

கர்நாடக மாநிலம் மங்களூரில் நடந்த துப்பாக்கி சூட்டில் இருவர் பலியான சம்பவத்துக்குப் பின், கேரளாவில் பல இடங்களில் பஸ், ரயில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கோழிக்கோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள் டயர்களையும், அமித்ஷாவின் உருவபொம்மையையும் எரித்தனர். உ.பி அலிகரிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கேரள மாநிலம், கோழிக்கோட்டில் கர்நாடக அரசு பஸ்கள் மறிக்கப்பட்டு மங்களூர் போலீஸ் நடவடிக்கை எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மங்களூருக்கு செல்லும் அரசு பஸ்களை கேரள அரசு போக்குவரத்து கழகமும் நிறுத்தியது. இந்த போராட்டத்துக்குப்பின் வயநாடு, கோழிக்கோடு, காசர்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய பகுதிகளில் போலீசார் விழிப்புடன் இருக்க கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் இருந்து மங்களூருக்கு நுழைபவர்களுக்கும் கர்நாடக போலீசார் கட்டுப்பாடுகள் விதித்தனர். ரயில் மூலம் கேரளாவில் இருந்து மங்களூருக்கு அடையாள அட்டை இல்லாமல் சென்ற 50 பேரை கர்நாடக போலீசார் அழைத்துச் சென்றனர். தமிழகத்திலும் நேற்று பல இடங்களில் போராட்டம் நடந்தது. இப்படி நாடு முழுவதும் 17 மாநிலங்களில், போராட்டம் தொடர்வதால் பதற்றம் நீடிக்கிறது. கலவரத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று விடுத்துள்ள அறிக்கையில், ‘ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடு இருக்கும். நாட்டு நலன் கருதி மக்கள் வன்முறையில் ஈடுபட கூடாது. அமைதியாக, ஜனநாயக முறையில், அரசியல் சாசனப்படி மக்கள் செயல்பட வேண்டும்,’ என கேட்டுக் கொண்டுள்ளார்.

‘காங். துணை நிற்கும்’
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று வெளியிட்ட வீடியோ தகவலில், ‘‘குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான மக்களின் குரலை, மத்திய அரசு முழுமையாக அலட்சியம் செய்கிறது. அவர்களின் அதிருப்தியை பாதுகாப்பு படைகளின் உதவியுடன் கொடூரமாக அடக்குவது, ஜனநாயகத்தில் ஏற்கக் கூடியதல்ல. காங்கிரஸ் இதை கடுமையாக எதிர்க்கிறது. அரசின் தவறான கொள்கைகள், முடிவுகளை எதிர்க்க கூடிய உரிமை மக்களுக்கு இருக்கிறது. அரசியல் சட்டத்தின் அடிப்படை மாண்புகளை காப்பாற்றவும், மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும் இந்திய மக்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், குடிமக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருக்கும்,’’ என்றார்.

இன்டர்நெட், எஸ்எம்எஸ் கட்
வாட்ஸ் ஆப் மூலமாக வதந்திகள், தவறான தகவல்கள் பரப்பப்படுவதால், வன்முறையை கட்டுப்படுத்த உத்தரப் பிரதேசத்தில் மொபைல் இன்டர்நெட் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை போன் நிறுவனங்கள் நிறுத்த அரசு உத்தரவு பிறப்பித்தது. உ.பி அலிகரில் 5வது நாளாக இன்டர்நெட் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் மங்களூரூ மற்றும் தஷினா கனடா மாவட்டங்களிலும் மொபைல் இன்டர்நெட் சேவை 48 மணி நேரம் நிறுத்தி வைக்க நேற்று முன்தினம் இரவு உத்தரவிடப்பட்டது. மேற்கு வங்கத்தில் சில பகுதிகளில் இன்டர்நெட் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மக்கள் யோசனை கூறலாம்
மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘நாங்கள் அனைத்து தரப்பிடமும் ஆலோசித்த பிறகே குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்தோம். இதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும், எதிர்ப்பு தெரிவிக்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு. இச்சட்டத்துக்கான விதிமுறைகளை உருவாக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு பரிந்துரை வழங்க விரும்புவோர் கொடுக்கலாம்,’ என கூறப்பட்டுள்ளது.

1987ம் ஆண்டுக்கு முன்பாக பிறந்தவர்கள் இந்தியர்களே...
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், மத்திய அரசு உயர் அதிகாரி நேற்று அளித்த பேட்டியில், ‘‘1987ம் ஆண்டுக்கு முன் இந்தியாவில் பிறந்த யாரும், அல்லது அவர்கள் பெற்றோர் இந்தியாவில் பிறந்திருந்தாலும் அவர்கள் சட்டப்படி இந்தியர்களாக கருதப்படுவர்,’’ என்றார். அசாம் மாநிலத்தில் மட்டும், இந்த காலவரையறை 1971ம் ஆண்டாக கணக்கிடப்பட்டு இந்தியர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் நேற்று டிவிட்டரில் விடுத்த செய்தியில், ‘‘இந்தியக் குடியுரிமையை நிருபிக்க பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்துக்கான எந்த ஆவணத்தையும் காட்டலாம். இந்த பட்டியலில் பல ஆவணங்கள் சேர்கப்படவுள்ளன. 1971ம் ஆண்டுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிக்களின் பிறப்பு சான்றிதழ் கேட்டு, எந்த இந்திய குடிமகனும் தொந்தரவு செய்யப்படமாட்டார்கள்’’ என தெரிவித்தார்.

மீண்டும் பிரியங்கா தர்ணா
டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேற்று இரவிலும் தொடர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அவருடன் அவரது மகள் மிரயாவும் பங்கேற்றார். இந்த வாரத்தில் 2 வது முறையாக இந்தியா கேட் பகுதியில் அவர் பங்கேற்ற போராட்டம். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: குடியுரிமை சட்டமும் மக்கள்தொகை கணக்கெடுப்பும் ஏழை மக்களுக்கு எதிரானது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை பிறகு இந்திய குடிமக்கள் அனைவரையும் வரிசையில் நிற்கவைத்து இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க வேண்டும் என அரசு சொல்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிக்கப்படும் ஏழைகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் என்ன செய்வார்கள்? இதற்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் அமைதியாக நடைபெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May26

சென்னை, 

 

தமிழகத்தில் நேற்றைய கொரோனா வைரஸ் ப

Feb03

சந்தனக் கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்ட சுமார், 15 ஆண்டுகள

Jan06

தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து அரசு

Jan28

ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதா

Jan31

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து த

May14

கொலைச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தமிழக அரசு

Jan11

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக

May15

மதுவாங்க ஞாயிறு முதல் திங்கள் வரை வண்ண டோக்கன்க

Jan20

பாரதீய ஜனதாக் கட்சியின் தேசியச் செயல் தலைவராக இருந்த ஜ

Jan31

நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண

Jan06

சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் அமைந்துள்ள சென்னை த

May24

தஞ்சை மாவட்டத்தில் அரசு அனுமதி அளித்ததையடுத்து 59 நாட்

May19

டெல்டா மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் இரவு சூறாவளி கா

Apr27

சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டத்தைச் 4 வயது சிறுமி 87 வயது ம

May20

திருவள்ளூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோ

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (02:27 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (02:27 am )
Testing centres