கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு காண தூதரக முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த படகுகளை இலங்கை அரசு அரசுடைமையாக்கி தங்கள் வசம் வைத்திருந்தது. இந்த படகுகளை விடுவிக்க வேண்டும் என மீனவர் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழக அரசியல் கட்சிகளும் அதனை வலியுறுத்தின.
இதற்கிடையே, இந்த படகுகளை ஏலம் விடும் பணி நேற்று தொடங்கியது. முதல் கட்டமாக 65 படகுகள் ஏலம் விடப்பட்டன. இலங்கையில் உள்ள காரை நகரில் ஏலம் விடுவதற்கான பணிகளை இலங்கை அரசு மேற்கொண்டது. அடுத்தடுத்த நாட்களில் மற்ற படகுகளும் ஏலம் விடப்படுகின்றன. வரும் 11-ம் திகதிக்குள் மீதமுள்ள அனைத்து படகுகளையும் ஏலத்தில் விட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 தமிழக மீனவர்கள் மற்றும் 79 படகுகளையும் விடுவிக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். மீனவர்களின் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு காண தூதரக முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணல் அம்பேத்கரின் 131-வது பிறந்தநாளை ஒட்டி, திருச்சி ம
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ
சுமார் 6.5 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளி
கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உ
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த
பிரதமர் மோடியை என்னதான் கொரோனா தொற்று விவகாரத்தில் எத
கணவரின் வன்கொடுமை தாங்கமுடியாமல் மனைவி 8 வருடமாக சாப்
முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்களின் இயல்பு ந
மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை நாயகனுமான
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக அஜய் பாது நி இலங்கையுடனான கடல் எல்லைக்கு அருகில் உள்ள பாக்கு நீரிண கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய மந்திரிகளுக்கு த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வ
