பன்வாரிலால் புரோகித் அவர்களை மரியாதையுடன் வழியனுப்பி வைக்கிறோம் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் புதிய கவர்னராக ரவீந்திர நாராயண ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று பிறப்பித்துள்ளார்.
ஆர்.என். ரவி தற்போது நாகலாந்து கவர்னராக செயல்பட்டு வருகிறார். இவர் நாளை முதல் தமிழ்நாட்டின் கவர்னராக செயல்பட உள்ளார்.
இதற்கிடையில், தற்போது தமிழ்நாடு கவர்னராக செயல்பட்டு வரும் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை முதல் பஞ்சாப் கவர்னராக பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில், பஞ்சாப் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித்திற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்-அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''பஞ்சாப் மாநில ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வைக்கிறோம்! தனிப்பட்ட முறையில் என் மீது அன்புடன் பழகியவர் அவர். இனிமையான நட்பு உங்களுடையது. தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது!” என தெரிவித்துள்ளார்.
கொரோனாவிலிருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்
சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர்
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ண மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டச உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்துள்ள சிஜர்சி என்ற சென்னை மெரினா கடற்கரை சாலை நேற்று காலை வழக்கம்போல் பர கோழிப் பண்ணை தீவனத்தில் முக்கிய மூலப்பொருளாக விளங்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தங்கள் ந உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் அங்குள்ள ராஜஸ்தான் மாநில புத்தாண்டின் முதல் நாளான நேற்று நவ சம இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 'அமேசோனியா - 1' கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம இந்தியாவில் கொரோனா பரவல் தீவரமடைந்துள்ள நிலையில், நாள
