இந்தி சின்னத்திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த சித்தார்த் சுக்லா நேற்று முன்தினம் திடீரென மரணம் அடைந்தார். 40 வயதே ஆன இவரது மரணம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் நேற்று ஒஷிவாரா சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இதில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் இயற்கைக்கு மாறான மரணத்திற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. மாரடைப்பு அவருக்கு மரணத்துக்கு வழிவகுத்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் நடிகரின் உள் உறுப்பு மாதிரிகள் மும்பையில் உள்ள கலினா தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் சில உறுப்பு மாதிரிகள் மருத்துவ கல்லூரியின் நோயியல் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை அறிக்கை வந்த பின்பே அவரின் மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா, அருள்நீதி, மஞ்
நடிகை சமந்தா விவாகரத்து குறித்து தனது இன்ஸ்டாகிராமில
கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவக
தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளி
பிக் பாஸ் வீட்டில் சண்டை போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வ
விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான மெ
தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அத
தமிழில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பழனி படத்தின் மூலம் ஹ
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழி
பிரபல பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் தமிழில் ரஜி
ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஒளிப
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில்
இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ம
இந்திய அளவில் முன்னணி
