அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாந்தகுமார். 2011-ம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடித்த ‘மகாமுனி’ படத்தை இயக்கினார் சாந்தகுமார். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.
இந்நிலையில், ஸ்பெயினில் நடைபெற்ற மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில், இப்படத்திற்கு மேலும் ஒரு விருது கிடைத்துள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை மகிமா நம்பியாருக்கு, சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்த தகவலை டுவிட்டரில் பகிர்ந்துள்ள நடிகை மகிமா நம்பியார், இயக்குனர் சாந்த குமார், நடிகர் ஆர்யா, நடிகை இந்துஜா, தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். சர்வதேச விருது வென்றுள்ள நடிகை மகிமா நம்பியாருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

அருண்விஜய்யின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகி
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா த
அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில் மேன் படத்தை தயாரித
தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நட
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன
வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள கமல்ஹாசன்
பீஸ்ட் படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் க
கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி ப
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பி
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோ
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆ
பிரவீன் பென்னட் இயக்கத்தில் விஜய் தொலைக்காட்சியில் 2019
பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன
