இந்தியா

 • All News
 • விபத்தில் குரல் இழந்த நபர்:தடுப்பூசி செலுத்திய பின் ஏற்பட்ட ஆச்சரியம்
விபத்தில் குரல் இழந்த நபர்:தடுப்பூசி செலுத்திய பின் ஏற்பட்ட ஆச்சரியம்
Jan 15
விபத்தில் குரல் இழந்த நபர்:தடுப்பூசி செலுத்திய பின் ஏற்பட்ட ஆச்சரியம்

 இந்தியாவின் ஜார்க்கண்ட மாநிலத்தில் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் விபத்து காரணமாக பக்கவாதம் ஏற்பட்டு, வாய் பேச முடியாமல் போன ஒருவர், கடந்த 4 ஆம் திகதி கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட்டை செலுத்திக்கொண்ட பின்னர் குணமடைந்துள்ளார்.55 வயதான துலர்சந்த் முண்டா (Dularchand Munda )என்ற இந்த நபர் தற்போது எழுந்து நடப்பதுடன் நன்றாக பேசுகிறார். இது மிகவும் ஆச்சரியத்திற்குரிய விடயம் என ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோவில் உள்ள வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணரான மருத்துவர் ஜிதேந்திரகுமார் (Dr Jitendra Kumar ) குறிப்பிட்டுள்ளார்.ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நடந்த விபத்தில் கால்கள் முடங்கி, குரல் பேச முடியாது போனதாகவும் ஜனவரி 4 ஆம் திகதி தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பின்னர் தன்னால் கால்களை நகர்த்தவும் பேச முடிவதாகவும் பொகாரோவில் உள்ள சல்காதி கிராமத்தை சேர்ந்த துலர்சந்த் முண்டா தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள மருத்துவர் ஜிதேந்திர குமார், “ இந்த சம்பவத்தை கண்டு நான் வியப்படைந்தேன். இதனை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய வேண்டும்.சில நாட்களுக்கு முன்னர் சுகவீனமுற்று குணமடைந்தால், அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஐந்தாண்டுகளுக்கு பின்னர் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பின்னர் திடீரென குணமடைந்தை நம்ப முடியவில்லை. இது சுகாதார துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்பட்ட விடயம்” எனக் கூறியுள்ளார்.  


வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep13

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி பகுதிய

Mar02

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூ

Feb04

தமிழகத்தில் ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பய

Mar15

ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளாராக அற

Jul11

சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் சிறைச்சாலை மரண

Jun22

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட

May30

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையை வீழ்த்துவதற்காக நாடு

Jul08

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து கார

Jun22

அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக

Aug19
Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:12 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:12 am )
Testing centres