உலகம்

 • All News
 • பெண் பிள்ளைகளில் நான்கில் ஒருவர் 100 வயது வரை வாழ்வார்கள்
 பெண் பிள்ளைகளில் நான்கில் ஒருவர் 100 வயது வரை வாழ்வார்கள்
Jan 13
பெண் பிள்ளைகளில் நான்கில் ஒருவர் 100 வயது வரை வாழ்வார்கள்

இன்னும் 20 ஆண்டுகளில் பிரித்தானியாவில் பிறக்கும் கால் பகுதி பெண் பிள்ளைகள் குறைந்தது 100 வயது வரையில் வாழ்வார்கள் என புதிய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.பொதுவாக 100 வயதைத் தொடும் பிரித்தானியர் எவருக்கும் ராணியாரிடம் இருந்து பிறந்தநாள் வாழ்த்து அட்டை பெற முடியும். இந்த நடைமுறைக்கு பிரித்தானிய அரச குடும்பம் மாற்றத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகலாம் என புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.அதாவது தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) வெளியிட்டுள்ள கணிப்புகளின் அடிப்படையில், 2045ல் பிறக்கும் ஐந்தில் ஒரு ஆண் பிள்ளை(20.9%) குறைந்தது 100 வயது வரையில் வாழ்வார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.அதே வேளை, நான்கில் ஒரு பெண் பிள்ளை(27%) 100 வயது வரையில் வாழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, 2020ல் பிறந்த 13.6% ஆண் பிள்ளைகள் 100 வயது வரையில் வாழ்வார்கள் எனவும் 19% பெண் பிள்ளைகளும் 100 வயதை கடப்பார்கள் என தெரிய வந்துள்ளது.ஆனால், 2020ல் பிறந்த ஆண் பிள்ளைகளின் சராசரி ஆயுட்காலம் 87.3 ஆண்டுகள் மற்றும் பெண் பிள்ளைகளின் சராசரி ஆயுட்காலம் 90.2 ஆண்டுகள் எனவும் ONS கணித்துள்ளது.இருப்பினும், தற்போது பிரித்தானியாவில் வாழும் மக்கள் முன்பு கணித்தபடி நீண்ட காலம் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 2020 ல் பிறந்த பெண் பிள்ளைகள் 2012ல் கணிக்கப்பட்டதை விட 4.8 ஆண்டுகள் முன்னதாகவும், ஆண் பிள்ளைகள் 4.5 ஆண்டுகளுக்கு முன்பும் இறப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இங்கிலாந்தில் உள்ள மக்களின் ஆயுட்காலத்தை மேம்படுத்துவதற்கான வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அரசாங்கம் பாரிய சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 


வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar28

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Mar12

கனடா நாட்டில் பிரதமராக இருப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரத

Jul31

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Jun18

உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க ந

Jun06

அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன

Jun15

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்

Jan21

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ம

Mar05

ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணத்தில் ரகீஸ்தா

Feb04

எகிப்தில்  2000  ஆண்டு பழமையான தங்க நாக்கினைக்  கொண

Apr09

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சேர்ந்தவர் அயன்னா வில்லிய

Mar14

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக

Mar10

மத்திய ஆப்பிரிக்க நாடான ஈகுவடோரியல் கினியாவின் பாட்ட

Apr12

கிழக்கு லடாக்கில் பங்கோங்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெ

May11

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம

May19

சவுதி அரேபியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெள

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (01:22 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (01:22 am )
Testing centres