கிளிநொச்சி

  • All News
  • விசுவமடு பகுதியில் துப்பாக்கி சூடு.சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது.
விசுவமடு பகுதியில் துப்பாக்கி சூடு.சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது.
Jan 11
விசுவமடு பகுதியில் துப்பாக்கி சூடு.சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – விசுவமடு பகுதியில் இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞரின் தந்தையும் இளைஞருடன் மோதலில் ஈடுபட்ட மற்றொரு இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



கைது செய்யப்பட்டவர்களை முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட பகுதிக்கு பொலிஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.



நேற்று (10) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதையடுத்து அப்பகுதிக்கு சென்ற ஒருவரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



சம்பவத்தில் விசுவமடுவை சேர்ந்த 22 வயதான இளைஞரே காயமடைந்துள்ளார்.

.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றே பயன்படுத்தப்பட்டுள்ளமை அறியகிடைத்துள்ளது.






Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (01:45 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (01:45 am )
Testing centres