கலைஞர்களின் ஆய்வு

 • All News
 • துவாரகன் என்ற புனைபெயர் கொண்ட சு.குணேஸ்வரன் !
துவாரகன் என்ற புனைபெயர் கொண்ட சு.குணேஸ்வரன் !
Sep 11
துவாரகன் என்ற புனைபெயர் கொண்ட சு.குணேஸ்வரன் !

சு. குணேஸ்வரன்

பிறப்பு
சு. குணேஸ்வரன்
இலங்கை

தேசியம்
இலங்கையர்

மற்ற பெயர்கள்
துவாரகன்

கல்வி
கலைமாணிப் பட்டம் (தமிழ் சிறப்பு)

பணி
ஆசிரியர்

பணியகம்
யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்

அறியப்படுவது
எழுத்தாளர்

சமயம்
இந்து

பெற்றோர்
சுப்பிரமணியம்
கமலாதேவி

வலைத்தளம்

துவாரகன் என்ற புனைபெயர் கொண்ட சு. குணேஸ்வரன் (S. Kuneswaran) ஈழத்துக் கவிஞராக விமரிசகராக புலம்பெயர் இலக்கிய ஆய்வாளராக அறிமுகமானவர்.

பொருளடக்கம்
வாழ்க்கைக் குறிப்பு
இதழ்கள் மற்றும் இலக்கிய அமைப்புக்களில் பங்களிப்பு
இணைய வெளியில் பங்களிப்பு
வெளிவந்த நூல்கள்
தொகுத்து வெளியிட்ட நூல்கள்
மின்நூல்கள்
தேர்ந்த தொகுப்பில் கவிதைகள்
மலர்களில் கட்டுரைகள்
விருதுகள்
வெளி இணைப்புகள்

வாழ்க்கைக் குறிப்புதொகு

துவாரகன் ஆரம்பக் கல்வியைக் கெருடாவில் இந்து தமிழ்க் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்திலும் க. பொ. த. உயர்தரத்தை யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும் பயின்றார். பெற்றோர் சுப்பிரமணியம் கமலாதேவி.

இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் (தமிழ் சிறப்பு) பட்டத்தைப் பெற்றார். 20ஆம் நூற்றாண்டில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் கவிதை புனைகதைகள் என்ற ஆய்வுக்காக அ. சண்முகதாசின் நெறியாள்கையில் 2006இல் முதுதத்துவமாணிப் பட்டத்தைப் பெற்றார்.

தற்போது யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.

கவிதைகளுடன் விமரிசனத்திலும் ஈடுபாடு கொண்டவர். இவரின் கவிதைகள் உயிர்நிழல் வார்ப்பு பதிவுகள் திண்ணை அதிகாலை.கொம் காற்றுவெளி தமிழ் ஓதர்ஸ் ஆகியவற்றிலும் பல இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளன.

ஈழத்து இதழ்களான மல்லிகை கலைமுகம் ஞானம் புதியதரிசனம் வெளிச்சம் தாயகம் செங்கதிர் போன்றவற்றிலும் புலம்பெயர் இதழ்களான உயிர்நிழல் எதுவரை போன்றவற்றிலும் தமிழகத்திலிருந்து வெளிவரும் யுகமாயினி உயிர்மை ஆகியவற்றிலும் வீரகேசரி தினகரன் நமது ஈழநாடு உதயன் வலம்புரி தினக்குரல் சுடர் ஒளி ஆகியவற்றிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
◾2010 இல் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டு புலம்பெயர் சிற்றிதழ்களின் அரசியல் என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வாசித்தார்.
◾2011 சனவரியில் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் கலந்து கொண்டு இலத்திரனியற் சூழலில் புகலிடச் சிற்றிதழ்கள் என்னும் ஆய்வுக் கட்டுரை வாசித்தார்.

மேலும் பிரதேச மட்டங்களில் இடம்பெற்ற இலக்கிய விழாக்களில் ஆய்வரங்குகளில் ஆய்வுக்கட்டுரைகள் வாசித்தார்.


இதழ்கள் மற்றும் இலக்கிய அமைப்புக்களில் பங்களிப்புதொகு
கெருடாவில் கலை இலக்கிய சாகரம் என்ற அமைப்பினால் கொண்டு வரப்பட்ட சக்தி என்ற இதழின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்திருக்கிறார்.
நூலகம் செய்திமடலின் ஆசிரியர்.
கலை இலக்கியச் சங்கத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவராக உள்ளார்.

இணைய வெளியில் பங்களிப்புதொகு

குணேஸ்வரன் தமிழ் விக்கிப்பீடியாவில் ஈழத்து எழுத்தாளர்கள் நூற்பட்டியல்கள் ஊர்கள் போன்றவை தொடர்பில் பங்களித்து வருகிறார். மேலும் நூலக நிறுவனத்தின் தொடர்பாடல் அணியிலும் [1] பங்களித்துவருகிறார்.

வெளிவந்த நூல்கள்தொகு
காற்றால் நிறையும் வெளிகள் (கவிதைத் தொகுப்பு) வெளியீடு தினைப்புனம் யாழ்ப்பாணம் 2008
உலைவும் புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த பார்வை (கட்டுரைகள்) வெளியீடு தினைப்புனம் முதற்பதிப்பு 2009
புதிதும் ஆய்வுக்கட்டுரைகளும் பிறவும் வெளியீடு - மீளுகை முதற்பதிப்பு சித்திரை 2012
◾ உள்வெளியும் (ஈழம் மற்றும் புகலிடப் படைப்பிலக்கிய ஆய்வுக்கட்டுரைகள்) வெளியீடு புத்தகக்கூடம் முதற்பதிப்பு ஜனவரி 2014.


தொகுத்து வெளியிட்ட நூல்கள்தொகு
தேர்ந்த கவிதைகள் சில 20-01-2007.(அல்வாய் பொன்னுத்துரை இராசம்மா நினைவாக தொகுக்கப்பட்டது)
கதைகள் (புலம்பெயர் படைப்பாளிகளின் சிறுகதைகள் சில)14-05-2007(அல்வாய் இராசையா தவமணிதேவி நினைவாக கொகுக்கப்பட்டது)இந்நூலில் அ.முத்துலிங்கம் கி.பி அரவிந்தன் க.கலாமோகன் அருண் விஜயராணி பார்த்திபன் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் சுருதி கோவிலூர் செல்வராஜன் ஆகியோரின் எட்டுக் கதைகள் உள்ளன.
வாசம்(குழந்தைப் பாடல்கள்)13-12-2008 வித்துவான் க. வேந்தனார் தொடக்கம் மு. பொன்னம்பலம் வரை 16 கவிஞர்கள் யாத்த 21 குழந்தைப் பாடல்களின் தொகுப்பு (இந்நூல் கெருடாவில் தொண்டைமானாறு மயிலன் சின்னத்தம்பி நினைவாக தொகுக்கப்பட்டது)
கதைகள் (சிறுவருக்கான நாட்டுப்புறக் கதைகள்) 20-10-2010 20 கதைகளின் தொகுப்பு இந்நூல் கெருடாவில் தொண்டைமானாறு சின்னத்தம்பி இராசமணி நினைவாக தொகுக்கப்பட்டது.
கதையாம்.. தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்(ஐ.சாந்தன் செம்பியன் செல்வன் காசி ஆனந்தன் எஸ்.பொ எஸ்.ராமகிருஸ்ணன் ஆகியோரின் 28 குறுங்கதைகள் கொண்ட தொகுப்பு)24-01-2012 இந்நூல் குணேஸ்வரனின் பெரியதாயார் இளையகுட்டி அருமைக்கிளி நினைவாகத் தொகுக்கப்பட்டது.


மின்நூல்கள்தொகு
தவிர்க்கப்பட்ட காலம் [2]( மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள் கவிதைத் தொகுப்பின் மீதான பதிவுகள்) 2011 ஏப்ரல்
கதையாம்... தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் (நூலாகவும் மின்நூலாகவும் வந்துள்ளது)[3]


தேர்ந்த தொகுப்பில் கவிதைகள்தொகு
கவிதைகள்(தேர்ந்த தொகுப்பு 1) 1996 வெளிச்சம் வெளியீடு.உப்புவேணும் கவிதை.
சரம் 1998 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கலைப்பீட மாணவர் ஒன்றியம் சின்னப்பூ என்ற பரிசுக்கவிதை.
பேசும்பட கவிதைகள் 1999 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கலைவட்டம் மனிதத்தைத் தேடி என்ற பரிசுக்கவிதை.
2011 கலையழகன் வெளியீடுகரவெட்டி.அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள் கவிதை.
காலக்கடிகாரம் 2011 திருமதி தங்கம்மா சரவணை நினைவு வெளியீடு புலோலி (தொகுப்பாளர்கள் சித்தாந்தன்சி.ரமேஷ் மருதம் கேதீஸ்) எச்சம் கவிதை.
துளிர்க்கும் கனவு 2012 ஆழி பதிப்பகம் தமிழ்நாடு.(அனார் அலறி பஹீமா ஜகான் சித்தாந்தன் துவாரகன் தீபச்செல்வன் பொன்காந்தன் தானா விஷ்ணு ஆகிய எட்டுக்கவிகளின் 80 கவிதைகள் கொண்ட தேர்ந்த தொகுப்பு)

மலர்களில் கட்டுரைகள்தொகு

விருதுகள்தொகு
வெளிகள் என்ற கவிதைத் தொகுப்பு 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான வடமாகாண இலக்கிய விருது பெற்றுள்ளது.
இலக்கியப் பேரவையால் வழங்கப்படும் கவிஞர் ஐயாத்துரை விருது[4] அதே ஆண்டில் மேற்படி கவிதை நூல் பெற்றுக் கொண்டது.

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 13 (04:40 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 13 (04:40 am )
Testing centres