பிரித்தானியா

  • All News
  • பிரித்தானியாவில் புகலிடம் கோருவோர்க்கான அறிவித்தல் ஒன்று அரசாங்கம் விடுத்துள்ளது
பிரித்தானியாவில் புகலிடம் கோருவோர்க்கான அறிவித்தல் ஒன்று அரசாங்கம் விடுத்துள்ளது
Jan 11
பிரித்தானியாவில் புகலிடம் கோருவோர்க்கான அறிவித்தல் ஒன்று அரசாங்கம் விடுத்துள்ளது

பிரித்தானியாவில் புகலிடம் கோர காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்றைய பிரித்தானிய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.



பிரித்தானியாவில் 18 வயதுக்கு குறைவு என்று கூறி புகலிடம் கோருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக உள்துறை அமைச்சின் தகவல்க வெளியாகி உள்ளன. 

இதனையடுத்து விஞ்ஞான ரீதியாக பரிசோதனை செய்து வயதை கண்டுபிடிக்கும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த  அவ் நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.



அதற்கமைய பிரித்தானிய அரசாங்கம் பணிகளை ஆரம்பித்துள்ளதாக உள்துறை அமைச்சின் அதிகாரிகள் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளனர்.



பிரித்தானியாவில் சிறுவர்கள் என்று புகலிடம் கோருபவர்களில் மூன்றில் இருவர் உண்மையில் சிறுவர்களா அல்லது போலியான தகவல்களை வழங்குகின்றார்களா என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 



இந்த விடயத்தை கருத்திற் கொண்டே இந்த நடவடி்ககை எடுக்க தீர்மானிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதற்கமைய, 1,696 கோரிக்கையாளர்களின் இவ்வாறான வழக்குகள் செப்டெம்பர் மாதம் வரை இருந்த ஒருவருட காலப்பகுதியில் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இந்த நிலையில் ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போல் பிரித்தானியாவும் எக்ஸ்றே ஸ்கேன் போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த தீர்மானித்துள்ளது.






Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:31 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:31 am )
Testing centres