உலக விளையாட்டு

 • All News
 • உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய டென்னிஸ் வீரர் ஜோகோவிச் விவகாரம்!
 உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய டென்னிஸ் வீரர் ஜோகோவிச் விவகாரம்!
Jan 10
உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய டென்னிஸ் வீரர் ஜோகோவிச் விவகாரம்!

ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்சை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஜோகோவிச்சின் வீசாவை ரத்து செய்தனர்.அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஜோகோவிச், அவுஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த நிலையில், தடுப்பூசி ஏற்றிய விபரங்களை வழங்கத் தவறிய காரணத்தினால் ஜோகோவிச் ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.இந்த சம்பவம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தமது வீசா ரத்து செய்யப்பட்டமையை எதிர்த்து ஜோகோவிச் அவுஸ்திரேலிய நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார். இவ் வழக்கு விசாரணையின் போது ஜோகோவிச் ஹோட்டல் தடுப்பு காவலிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் எனவும், வீசாவை ரத்து செய்த அரசாங்கத்தின் தீர்மானம் பிழையானது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.உலக டென்னிஸ் தர வரிசையில் முதனிலை வகிக்கும் சேர்பிய வீரரான ஜோகோவிச், அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நடப்பு சாம்பியன் என்பது சுட்டிக்காட்டிடத்தக்கது.இதனையடுத்து ஜோகோவிச்சின் கடவுச்சீட்டு உள்ளிட்ட அனைத்து உடமைகளையும் மீள ஒப்படைக்குமாறு நீதிமன்றம் மேலும் உத்தரவு பிறப்பித்தது.நீதிமன்றின் இந்த தீர்ப்பு அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகின்றது. இந்த நிலையில், ஜோகோவிச்சின் வீசாவை அமைச்சரவை அதிகாரத்தைப் பயன்படுத்தி மீண்டும் ரத்து செய்ய முடியும் என அரசாங்கத் தரப்பு சட்டத்தரணி கிறிஸ்டோபர் டரான் தெரிவித்துள்ளார்.அமைச்சு அதிகாரத்தை பயன்படுத்தி ஜோகோவிச்சின் வீசா ரத்து செய்யப்பட்டால் அவர் மூன்று ஆண்டுகளுக்கு அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டார் என நீதிபதி அந்தனி கெல்லி தெரிவித்துள்ளார்.இதன்படி, அமைச்சரவை அதிகாரம் பயன்படுத்தப்பட்டு வீசா மீளவும் ரத்து செய்யப்பட்டால் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவிற்குள் மூன்று ஆண்டுகள் பிரவேசிக்க முடியாத நிலை உருவாகும் என்பது சுட்டிக்காட்டிடத்தக்கது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun29

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரி

Jan26

பிக் பேஷ் ரி-20 தொடரின் 55ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன

Aug12

கேரள அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தி

Nov10

டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று அபு தா

Jul10

நார்த்தம்ப்டனில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடை

Oct16

ஐ.பி.எல். 2021 தொடரில் நான்காவது முறையாக சென்னை சூப்பர் கி

Aug23

அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடைப

Aug16

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டி சே

Feb12

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில்,

Feb05

பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடை

Sep03

இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலத்தை வென்று கொடுத்துள

Jan26

சர்வதேச கிரிக்கெட் சபை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை அறிம

Aug05

ஒலிம்பிக் வரலாற்றில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தை க

Sep11

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ்

Jan25

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:46 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:46 am )
Testing centres