எதிர்வரும் நாட்களில் மதுபானம் மற்றும் சிகரட்டின் விலையை அதிகரிப்பது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு சிறப்பு சந்தைப் பொருள் மற்றும் சேவை வரியை விதிக்கும் அரசாங்கத்தின் முடிவிற்கு அமைய இந்த விலை அதிகரிப்பு இடம்பெறலாம் என நிதி அமைச்சினை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று இச் செய்தியை வெளியிட்டுள்ளது.
சிறப்பு சந்தைப் பொருள் மற்றும் சேவை வரி விதிப்பது தொடர்பில், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச முன் வைத்த யோசனைக்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், மிக விரைவில் மதுபானம், சிகரட்டுக்களின் விலைகளில் மாற்றம் ஏற்படும் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுபானம், சிகரெட்டுகள், சூதாட்டம் மற்றும் சூதாட்ட விடுதிகள் போன்றவை தொடர்பில் சிறப்பு சந்தைப் பொருள் மற்றும் சேவை வரியை விதிக்க அரசாங்கம் ஆலோசனையை முன்வைத்துள்ளது.
எனவே குறித்த வரியின் வீதம் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், நாடாளுமன்றத்திற்க்கு சட்ட மூலம் ஒன்றினை கொண்டு வந்து வரியை அமுல் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் பேரணியில் க
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த பெப்ரவர
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று (
யாழ்ப்பாணம், திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்
கொழும்பில் எரிபொருள் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத
இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதி
அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவி வகிக்கும் ஒருவர
அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பத
கஜீமா தீ விபத்தில் தீக்கிரையாக்கப்பட்ட எளியவர்களின்
இலங்கையில் மிகவேகமாக பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று
மன்னார் மாவட்டச் செயலகத்தின் 2022 ஆண்டுக்கான வாணிவிழா ந
மட்டக்ககளப்பில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வ
கொரோனா தொற்றாளர்களாக மேலும் 355 பேர் சற்று முன்னர் அடைய
