கொரோனா வைரஸ்

 • All News
 • இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!
இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!
Jan 01
இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!

கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றியது. பின்னர் உலகம் முழுவதும் பரவிய அந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் உருமாற்றம் அடைந்தது.தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நைஜீரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டன. இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பெயரிடப்பட்டது.கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்ததால் அதன் பாதிப்பு தொடர்ந்து இருந்து வரும் நிலையில் கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது.இது மற்ற உருமாறிய கொரோனா வைரஸ்களை விட மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளது.இதனால் உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருக்கிறது.கொரோனா வைரஸ், ப்ளூவென்சா தொற்று ஆகிய இரண்டு தொற்றுகள் சேர்ந்து ப்ளூரோனா என்ற புதிய வகை தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இது ப்ளூ காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு ஒரே நேரத்தில் ஏற்படுவதை குறிக்கும்.மத்திய இஸ்ரேலில் உள்ள பெட்டாச் டிக்வாவில் உள்ள பெய்லின்சன் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவருக்கு ப்ளூரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் குணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரசுடன் ப்ளூவென்சா தொற்று இணைவதால் கூடுதல் பாதிப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் நிமோனியா ஏற்படலாம் என்றும் சில சமயங்களில் மரணமும் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 புதிய வகை ப்ளூரோனா வைரஸ் தொற்று குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep17

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் 

இங்கிலாந்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் பிர

Aug11

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில

Mar06

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Jun30

கொரோனா வைரஸ் தொற்றை உலகத்துக்கு பரப்பிய சீனா 3 முதல் 17 வ

Jun12

உலக அளவில் 

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Jun26

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 18 கோடிக்கும் அதி

Jul09

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 18 கோடிக்கும் அதி

Sep15

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைர

Apr24

ஜப்பான் நாட்டில் கொரோனா பாதிப்புக்கான 4-வது அலை வீசி வர

Jul31

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில

Jun29

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Sep14

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட 

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:04 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:04 am )
Testing centres