சாதனையாளர்கள்

  • All News
  • தங்கம் வென்று சாதித்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவன் - 2016
தங்கம் வென்று சாதித்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவன்  - 2016
Sep 08
தங்கம் வென்று சாதித்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவன் - 2016
இந்தியாவின் புனே நகரில் இடம்பெற்று வரும் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று சாதித்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவன்எஸ்.விஸ்ணுகாந்த் அவர்களைப் பாராட்டி ஊர்வல நிகழ்வொன்றும், வெண்கலம் வென்ற வேம்படி மாணவி ஜே.டினோஜாவைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று யாழில் இடம்பெற்றுள்ளது.

64 நாடுகள் கலந்து கொண்டுள்ள இந்தப் போட்டியில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற 17வயதுக்கு உட்பட்ட பளுதூக்கலில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்த யாழ். மத்திய கல்லூரி மாணவன் எஸ்.விஸ்ணுகாந் தங்கப்பதக்கத்தை கைப்பற்றிச் சாதனை படைத்து யாழ்ப்பாணத்திற்கு பெருமை சேர்த்தார். அம் மாணவனுக்கு இன்றைய தினம் பாடசாலை ரீதியாக கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 227 கிலோ பளுவைத்தூக்கியே விஸ்ணுகாந் இந்தச் சாதனையை நிலைநாட்டியுள்ளார். பொதுநலவாயப் போட்டிகளில் கனிஸ்ட பிரிவு பளுதூக்கலில் இலங்கையின் உயர்மட்டப் பெறுபேறாக இருந்த 225 கிலோ விஸ்ணுகாந் மூலமாக முறியடிக்கப்பட்டு 227 கிலோவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் யாழ்சிறி :

  • யாழ்சிறி பேஸ்புக்
  • யாழ்சிறி ட்விட்டர்
  • யாழ்சிறி யு டியூப்
  • Share News