தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஷ்வந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள நடிகர் விஷ்ணு விஷால், டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “இது தவறான செய்தி. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும், நான் இந்த படத்தை திரையரங்கில் வெளியிடவே விரும்புகிறன். சிறந்த திரையரங்க அனுபவத்தை கொடுக்கும் விதமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்” என அவர் கூறியுள்ளார்.

தல அஜித் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக அடுத்த வாரம
தனியார் தொலைக்காட்சியில் வலம் வந்த பூஜா ராமசந்திரன்,
முன்னணி நடிகர்களின் படங்களை திரையரங்கில் எந்த அளவிற்
சென்னை:
நடிகை மும்தாஜ் வீட்டில் பணிப்பெண
தமிழ் சினி
அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கேஷ்
பிக்பொஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசனில் போட்டியாளராக கலந
நடிகை சமந்தா விவாகரத்து குறித்து தனது இன்ஸ்டாகிராமில
பிரபல நடிகை ஒருவர், அட்ஜெஸ்ட்மென்டுக்கு தன்னை அழைத்தத
கடந்த 2016ம் ஆண்டில் ‛பனாமா பேப்பர்ஸ்' நிறுவனத்தின் ரகச
ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் 'கிராண்மா' என்கிற
நடிகர் மயில்சாமி புது மணத் தம்பதிகளுக்கு பெட்ரோலை அன்
