திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதை இந்தி திரையுல உலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் அமிதாப்பச்சன் ஏற்கனவே பெற்றுள்ளார்.
மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கும், இயக்குனர் பாலச்சந்தருக்கும் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்துக்கு 2019-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.
இன்று டெல்லியில் தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் மத்திய மந்திரிகள் அனுராக் தாக்கூர், முருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்றவர்கள் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

நடிகை வனிதா விஜயகுமாரின் மகனுக்கு 21 வயதான நிலையில் 21
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம
பாடகி சிவாங்கி, ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி மூலம்
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான 'குக்கூ த
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகச
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது தன
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி
நயன்தாரா தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள
நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் பல போராட்டங்களை,தாண
தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தள
பிரபல பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் தமிழில் ரஜி
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தற்போது தொ
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் செந்தில். இவர் க
இந்திய அளவில் முன்னணி
