கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தனியார் உறுப்பினர்கள் பொதுச்சட்டம் குறித்து இலங்கை கவலை வெளியிட்டுள்ளது.
கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனை நேற்று(08) அமைச்சில் சந்தித்தபோது, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இலங்கையின் நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பில், ஒன்ராறியோ சட்டமன்றத்தில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நிறைவேற்றப்பட்ட தனியார் உறுப்பினர்கள் பொதுச்சட்டம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச்சட்டம் ஒன்ராறியோ மேல் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆற்றிய உரையில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி, பல தசாப்த கால மோதலைத் தொடர்ந்து, சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை அடைந்து கொள்வதற்கான முயற்சிகளை இலங்கை தொடர்வதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள், கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும் என்பதையும் அமைச்சர் நினைவு கூர்ந்ததாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோ சட்டமன்றத்தின் தீர்மானமான இந்த விடயம், அரசியலமைப்பு சார்ந்த கேள்வி என்ற வகையில், நீதித்துறையின் செயற்பாட்டில் உள்ளதாகக் கனேடிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அதன் முன்னேற்றங்கள் குறித்து அமைச்சருக்குத் தெரிவிப்பதற்கு, கனேடிய உயர்ஸ்தானிகர் இணங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியிலிருந்து அம்பாறை - பொத்துவில் பிரதேசத்தி
சீனாவின் நல்ல திட்டங்களை ஏற்றுக்கொண்டும் கெட்டவற்றை&n
|
இலங்கையில் வாக Oct20
ஊடகவியலார்களுக்காக நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் தே Oct01
அரசாங்கத்தை கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்த Mar30
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின Mar07
வவுனியா, குட்செட் வீதி, உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொ May12
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் நாட் Jun15
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டடான் பிரதேச செய Sep22
பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் ச Sep25
அரசாங்க உத்தியோகத்தர்கள் பொருத்தமான ஆடைகளை அணிவது தொ Feb02
இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந் Jan30
நாட்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து Feb08
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை வயல் பகுதி Feb21
கொடதெனியாவ வத்தேமுல்ல கிராம மக்களை சிலர் பீதியில் அழ் தமிழ் சினிமாசிறப்பானவை
![]() Sri Lanka
World
|