நிகழ்வுகள்

 • All Events
 • அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் 31வது ஆண்டு நிறைவுவிழா 09.11.2019!
அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் 31வது ஆண்டு நிறைவுவிழா 09.11.2019!
Nov27
அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் 31வது ஆண்டு நிறைவுவிழா 09.11.2019!

யேர்மனி-ஒபகௌசன் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் 31வது ஆண்டு நிறைவுவிழா கடந்த 09.11.2019 சனிக்கிழமை 15.30 மணிக்கு BERTHA-VON-SUTTER-GYMNASIUM, Bismarck Str.53, ஒபகௌசன் என்றமுகவரியில் அமைந்த மண்டபத்தில் பெற்றோரின் திருக்கரங்களால் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. மௌன வணக்கத்தோடு தொடர்ந்த நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தினை அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் மாணவிகள் இசைத்ததைத்தொடர்ந்து ஆசிர்யர்களும் மாணவர்களும் இணைந்து பாடசாலை கீதத்தினை இசையோடு பாடி மங்களகரமாக ஆரம்பித்துவைத்தனர். நிகழ்வுகளைப் பாடசாலையின் உயர்வகுப்பு மாணவிகளும் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் பழைய மாணவர்களில் ஒருவரும் தற்போதைய நிர்வாகச் செயலாளரும் ஆசிரியருமான திரு.விமலசேகரம் சபேசன் அவர்களும் சிறப்புறத் தொகுத்து வழங்கினார்கள்.
பாடசாலையின் நிர்வாகத் தலைவர் திரு.அம்பலவன்புவனேந்திரன் ஆசிரியர் அவர்கள் விழாவினுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்ற சிற்றுரையுடன் தனது தலைமையுரையினையும் சுருக்கமாக நிறைவுசெய்தார். தொடர்ந்து , சின்னஞ்சிறு மாணவர்களின் அ..ஆ.. (அகரவரிசை)பாடல், அறுசுவை பற்றிய பேச்சு, அ-ஆ சொல்வரிப்பாடல். அம்மாவைப்பற்றிய கதைப்பாடல் என்று தொடங்கி நல்ல பழக்கங்கள், திருக்குறள் பொருளுடனான உரை, அறிஞர் ம.மு.உவைஸ் அவர்கள் பற்றிய பேச்சு என்று மாணவர்களின் தனித் திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளினிடையே கல்வியாளர்கள், பிரமுகர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும. ் சமூகப்பணியாளர்களின் வாழ்த்துரைகளும் இடம்பெற்றன. சோஸ்ற் தமிழ்க்கல்விக் கலாச்சார அமைப்பைச்சேர்ந்த திருமதி.இந்து தெய்வேந்திரம, எழுத்தாளரும் தமிழ் ரைம்ஸ் பத்திரிகையின் துணையாசிரியருமான: திரு.கந்தையா சுப்ரமணியம். மற்றும் எழுத்தாளரும் யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளருமான: திருமதி. சந்திரகௌரி சிவபாலன் ஆசிரியை அவர்களும் வழங்கிய வாழ்த்துரைகள் விழாவினுக்கு உற்சாக பானங்களாக அமைந்தன.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தனராகக் கலந்துகொண்ட யேர்மனி- தமிழ்க்கல்விச் சேவையின் தலைவரும் டோட்முண்ட் வள்ளுவர் தமிழ்ப்பாடசாலையின் பொறுப்பாசிரியருமான தமிழ்மணி திரு. பொன்னுத்துரை சிறீஜீவகன் ஆசிரியர் அவர்களின் சிறப்புரையினையடுத்து அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் பழைய நிர்வாகத்தினர்களுக்கு திரு. பொன்னுத்துரை சிறீஜீவகன் அவர்களின் கரங்களால் மதிப்பளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து; யேர்மனி- தமிழ்க்கல்விச் சேவையின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் 31வது ஆண்டுவிழாவினை பாராட்டி திரு. பொன்னுத்துரை சிறீஜீவகன் அவர்கள் வாழ்த்துமடல் ஒன்றினை வாசித்து ஆசிரியர்களிடம் கையளித்தார்.
நிகழ்வுகளின் வரிசையில் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் 31வது ஆண்டு வரலாற்றுப்பதிவாக சுமார் 20 நிமிடங்களுக்குள்ளடங்கலான ஆவண-விவரணப் படம் திரையிடப்பட்டது. தொடர்ந்த நிகழ்வுகளில் கலகலப்பையும் உற்சாகத்தினையும் ஏற்படுத்திய, பாடசாலையின் ஹிப் ஹொப் மற்றும் பொலிவூட் நடன வகுப்பு மாணவர்களின் திரையிசைப்பாலுக்கான நடனங்களும் பாடசாலையின் உதவியாசிரியை திருமதி.கலைநிதி சபேசனின் நெறிப்படுத்தலில் திருக்குறள் இசைப் படல்களுக்கான நடனமும் கொலுசுக்கடை என்ற நடனங்களும் இடம்பெற்றன.
வாழ்த்துரைகளின் வரிசையில், அகரம் சஞ்சிகையின் பிரதமஆசிரியரும் ஈ.ரி.ஆர் வானொலியின் இயக்குநருமான திரு.தர்மலிங்கம் ரவீந்திரன் ஆசிரியர்அவர்களும்; மண் கலையிலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க ஆலோசகருமான திரு.வைரமுத்து சிவராசா அவர்களும்: எசன்-தமிழ் மொழிச்சேவை கலாச்சார மன்றத் தமிழ்ப்பாடசாலை நிர்வாகப் பொறுப்பாளரும் பிரபல வர்த்தகருமான திரு. சிவஅருள் அவர்களும் மாணவர்களின் திறமைகளை வியந்து பாராட்டி வாழ்த்திய உரைகளினூடாக மாணவர்கள் மனதிலும் இடம்பிடித்தனர்.
இடைவேளையினைத் தொடர்ந்த அடுத்தடுத்த நிகழ்வுகளாக பாடசாலையின் பழைய மாணவர்களின் கருத்துக்களையும் வாழ்த்தினையினையும் தொடர்ந்து வெற்றிமணிபத்திரிகை மற்றும் சிவத்தமிழ் சஞ்சிகையின் ஆசிரியருமான மு.க.சு.சிவகுமாரன் அவர்களின் வாழ்த்துரையும் இடம்பெற்றன. கௌரவ விருந்தினராகக் கலந்து நிகழ்வினைச்சிறப்பித்த கலைவிளக்கு சஞ்சிகையின் ஆசிரியரும் புலம்பெயர் பன்னாட்டு எழுத்தாளர் ஒன்றியத்தின் செயலாருமான திரு. சுப்ரமணியம்..பாக்கியநாதன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றதனையடுத்து பாடசாலை நிர்வாகத்தினர் அவருக்கான கௌரவத்தினை வழங்கிப் பெருமைப்படுத்தினர். இதனையடுத்து அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் மாணவர்கள் ஆசிரியர்களுக்கான தமது கௌரத்தினை வழங்கி மதிப்பளித்து மகிழ்ந்தனர்.தொடர்ந்த நிகழ்வுகளில் எசன்-தமிழ் மொழிச்சேவை கலாச்சார மன்றத் தமிழ்ப்பாடசாலை ஆசிரியை திருமதி.சாந்தினிதுரையரங்கள் அவர்களின் நெறியாழ்கையில் அமைந்த பாரம்ரீய நடனநிகழ்வுகள் மாணவர்களால் அரங்கேறியது. மேலும், பொதுப்பணிகளிலும் சமூகமேம்பாட்டிலும் தம்மை இணைத்துச் செயற்படுகின்ற அறுவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வினைத் தொடர்ந்து இதரமாணவர்களின் கலைத்திறன்கள் அரங்கினை அலங்கரித்தன. நிறைந்த வாழ்த்துரைகளில் ஒபகௌசன்-வருத்தப்படாத வாலிபர்சங்க உறுப்பினரும் எழுத்தாளருமான க.முருகதாசன் அவர்களின் வாழ்த்தும் இளம் படைப்பளிகளில் ஒருவரான செல்வன்.இராம் பரமானந்தனின் சிற்றுரையும் இடம்பிடித்தன.
மாணவர்களுக்கான கௌரவிப்பினை முன்னைநாள் பாடசாலை நிர்வாகிகளில் ஒருவரும் பாடசாலையில் தொடக்ககால ஆசிரியர்களில் ஒருவருமான திரு.துரைச்சாமி நந்தகுமார் ஆசிரியரின் கரங்களால் வழங்கப்பட்டது. தற்போதைய நிர்வாகச் செயலாளரும் ஆசிரியருமான திரு.விமலசேகரம் சபேசன் அவர்களும் பாடசாலையின் தொடக்க காலத்தில் இருந்த சூழ்நிலைகளையும் நிர்வாகத்தின் சிரமங்களையும் காலமாற்றங்களினால் எதிர்காலத்தின் நடைமுறைகளையும் விளக்கியதோடு காலத்தின் இன்றையதேவைகளும் தாய்மொழிக்கல்வியின் அவசியம் பற்றிய சிற்றுரையினை நிகழ்த்தினார். விழாவின் இறுதியில் ஆசிரியர் அம்பலவன்புவனேந்திரனின் நெறியாழ்கையில் உயர்வகுப்பு மாணவர்களால் தயாரித்து வழங்கப்பட்ட இடைவெளி என்ற 15 நிமிட நாடகம் இடம்பெற்றதனையடுத்து நன்றியுரையுடன் ஆண்டுவிழா 21.30 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct21

சரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ் வடமராட்சி ஸ்ரீ வல்லிபு

Oct21

‘புரட்டாசி சனி’ என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை

Oct21

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், நேற்றைய தினம் சுமார் 1 இலட

Oct21

கொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய

Oct21

கிளிநொச்சியில் டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன

Oct21

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டம

Oct21

வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்த சுவாமி ஆலய தே

Oct21

ஆடி மாதத்தில் வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று அ

Oct21

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலயம் மற்

Oct21

நாவற்­கு­ழி­யில் கருங்­கற்­க­ளால் அமைக்­கப்­பட்ட திரு­வ

Oct21

உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற

Oct21

வரலாற்றுச் சிறப்புமிகு நயினாதீவு அருள்மிகு ஶ்ரீ நாகபூ

Oct21

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசு

Oct21

வரலாற்றுச் சிறப்பு மிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின

Oct21

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக்

Oct21

சித்திராப் பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும

Oct21

யாழ்ப்பாணம் தச்சன் தோப்பு, திருவருள் மிகு முத்துக்குமா

Sep10

நமக்கான களத்தை நாமே உருவாக்குவோம் எதிர் வரும் 13/02/2016 அன்ற

Sep10

நமக்கான களத்தை நாமே உருவாக்குவோம் எதிர் வரும் 13/02/2016 அன்ற

Sep10

யாழ். இணுவில் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்க முன்பள்

Sep10

உலகமெல்லாம் பரந்து வாழும் கிறிஸ்தவர்கள் இன்று ஜேசு கிற

Sep10

ஆஸ்திரேலிய நகரான சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட

Sep16

யாழ்ப்பாணம்- நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின

Sep16

தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் நிகழ்வு 15/09/2019 காலை 9:30 ம

Oct05

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் தமிழர் ப

Oct05

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் வசந

Oct05

மகாத்மா காந்தியின் அகிம்சையை போதிப்பதற்கு இந்திய தூதர

Oct05

சர்வதேச ரீதியில் செயற்பட்டுவரும் லியோ கழகத்தின் செயற்

Oct05

பரிஸ் கலாலயம் கலைக்கல்லூரி அதிபர் பரதசூடாமணி கௌசலா ஆனந

Oct18

பிரான்ஸ் நாட்டில் எமது தாயக இசைவாணர் கண்ணன் அவர்களின்

Oct18

அனைத்துலக தமிழ்கலை நிறுவகமும் (IITA), பிரான்சு தமிழ்ச்சோலை

Oct21

Dortmund தமிழர் அரங்கில் இன்று வெகு சிறப்பாக நடைபெற்ற திரைப்

Oct24

நீர்வேலியை தாயகமாகக் கொண்ட பாடகி அபிநயா இலண்டனில் இருந

Nov03

இசைவாணர் கண்ணன் அவர்களுக்கு பிரான்ஸ் ஸ்ரீ காமாட்ஷி அம

Nov01

சுவிஸ் நாட்டில் இசைவாணர் கண்ணன் மாஸ்டர் அவர்களுக்கு மத

Nov03

கண்ணன் மாஸ்ரர் அவர்களுக்கு 26_10_2019 அன்று யேர்மன் வூப்பற்ற

Nov09

08.11.2019 வெள்ளிக்கிழமை காலை 08.00 மணிக்கு மாணவர்களின் இன்னிய அ

Nov09

மாணவர்களிடம் எவ்விதமான கட்டணங்களையும் அறவிடாது இலவசம

Nov11

காரைநகர் புதுறோட் கிழவன்காடு கந்தசுவாமி கோயிலில் 02.11.2019

Nov27

கனடாவில் புகழ்பெற்ற இசைக்குழுவும் இசைப் பயிற்சிக் கல்

Nov27

யேர்மனி-ஒபகௌசன் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் 31வது ஆண்

Nov27

யேர்மனி தமிழ்க் கல்விச் சேவையுடன் இணைந்து சேவையாற்றும

Nov27

செல்வபுரம் முல்லைத்தீவு புனித யூதாததேயு முன்பள்ளி பாட

Dec02

பிரித்தானியா பாராளமன்றத்தில் உலக அளவில் வைத்தியதுறைய

Dec08

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் ப

Dec16

மகாகவி பாரதியாரின் 133 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, இன

Jun05

விடுதலை போராட்டத்தின் முதல் வித்து பொன். சிவகுமாரனின் 44

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 13 (02:56 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 13 (02:56 am )
Testing centres