நிகழ்வுகள்

  • All Events
  • சித்திராப்பௌர்ணமி இன்று
சித்திராப்பௌர்ணமி இன்று
Oct21
சித்திராப்பௌர்ணமி இன்று
சித்திராப் பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று இந்துக்களால் அனுஷ்டிக்கப்படும் ஒரு விரத நாளாகும்.இந்த சித்திராபௌர்ணமி விரதம் நாளை (29)ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.இந்த தினத்தில் சிவன் ஆலயத்திற்கு சென்று, தாயை நினைத்து விரதம் இருந்து வழிபாடுகளை செய்ய வேண்டும். இந்த முக்கிய நாளில் இந்துக்களாகிய நாம் வருடத்தில் ஒருமுறை அன்னையை நினைவுகூருகின்றோம்.

சித்ரபுத்திரன்: இவ்வுலகின் பாவ புண்ணி பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்டினார்.

சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்ற பெயரும் வைத்தார். இந்த சித்திர புத்திரன் (சித்ரகுப்தன்) சித்ரா பவுர்ணமி தினத்தில் அவதரித்தார். அண்ட சராசரங்களிலுள்ள முன்னாள் கணக்குகளையும், பிரம்மா விஷ்ணு முதலானவர்களுடைய பாவ புண்ணிய கணக்குகளையும் தினமும் தமக்குத் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி சித்திர புத்திரனார் கயிலையிலிருந்து கொண்டு கணக்குகளை எழுதிவந்தார்.

ஒரு சமயம் தேவேந்திரன் தனக்கு மக்கட்பேறு வேண்டுமென்று தருமங்கள் பல புரிந்து இறைவனை நோக்கி இந்திராணியுடன் தவம் புரிந்தார். சிவபெருமான் காமதேனுவை அழைத்து, இந்திரன் இந்திராணி தவத்தை எடுத்துரைத்துப் பின்னர், சித்திரபுத்திரரை இந்திரனுக்குப் புத்திரனாகப் பிறந்து, அவன் கவலையை தீர்க்குமாறு அருள்புரிந்தருளினார். அங்ஙனமே சித்திரபுத்திரனார் காமதேனுவின் வயிற்றில் உதித்து பாவ புண்ணியங்களைப் பகுத்து வந்தார்.

இந்த சித்திரபுத்திர நாயனார் கதை சித்ரா பவுர்ணமி அன்று ஆலயங்களில் படிக்கப்பட்டு அன்னதானங்கள் நடைபெற்று வருகின்றன. சித்திரைக் கதை, சித்திரைக் கஞ்சி எனவும் வழங்கப்படும்.

சித்ரா பவுர்ணமி: இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் முன் – பின்னாக வருவதால் அந்த மாதத்திற்கு சித்திரை மாதம் என்று பெயர். சித்திர குப்தனை வேண்டிக்கொண்டு பெரும்பாலும் பெண்களே விரதம் மேற்கொள்கின்றனர். சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்திர குப்தனைப்போல மாக் கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர். பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர்.

இந்த நாளில் மரணதேவனின் விசேஷ பிரதிநிதியான சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி தினத்தில் செய்யப்படும் இந்த பூஜையால் மேல் உலகில் உள்ள தேவர்கள் திருப்தியடைந்து மனிதர்களின் செயல்களை மிகுந்த பரிவுடன் தீர்மானிக்கிறார்கள்.

பூஜை: சித்ரா பவுர்ணமியன்று செய்யப்படும் விரிவான பூஜையைப் பற்றி பல நூல்கள் தெரிவித்திருந்தாலும், நாம் எளிமையாக ஒரு கலசம் அல்லது விக்ரகத்தின் தேவதையை ஆவாஹனம் செய்து

சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்.
சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்

என்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். மேலும், இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.

பூஜையின் பலன்: சித்ரகுப்த என்பது மறைந்துள்ள படம் எனப்படும். இந்த பூமியில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் நமக்கு மேலான சக்தி ஒன்று (நமக்கு தெரியாமலேயே நமது தோளில் சித்ரகுப்தர்களாக அமர்ந்து) இடைவிடாமல் கண்காணிக்கிறது. இந்த எண்ணத்தை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வதே சித்ரா பவுர்ணமி பூஜையின் மானசீக பலன் ஆகும்.



கோயில்: இந்த சித்ரகுப்தனுக்கென காஞ்சிபுரத்தில் ஒரு ஆலயமும், திருவண்ணாமலையில் ஒரு சன்னதியும் உள்ளது. இதே போல் தேனி மாவட்டம் போடி அருகே கோடங்கிப்பட்டி, கோவை சிங்காநல்லூர் எமதர்மன் கோயில்களிலும் சித்ரா பவுர்ணமி தினத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்ய கடன் வசூலாகும், வாணிபம் சிறக்கும், ஆயுள்பலம் கூடும் என்பது நம்பிக்கை.

எமன் தென்திசைக்கு அதிபதி என்பதால் சித்ரா பவுர்ணமி அன்று போடப்படும் கோலங்கள் தென்புற வாசலை அடைப்பது போல் கோலம் போடும் வழக்கம் இன்றும் உள்ளது. சித்ரா பவுர்ணமி மற்ற பவுர்ணமியைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்தது.

இந்திரன் செய்த சித்திரை பூஜை!

இறைவன் புரிந்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் முதல் திருவிளையாடல் இந்திரன் பழி தீர்த்த படலம். ஒரு சமயம் இந்திரன், பிரகஸ்பதியை அவமதித்து விட்டான் அதனால், அவனுக்கு ஆலோசனை கூறுவதை பிரகஸ்பதி நிறுத்தி விட்டார். குருவின் வழிகாட்டுதல் இல்லாததால் இந்திரன் பல தீய செயல்களைச் செய்து வந்தான். இதனைக்கண்ட பிரகஸ்பதி, இந்திரனை மன்னித்து மீண்டும் அவனுக்கு நல்வழிகாட்டத் தொடங்கினார்.

பிரகஸ்பதி இல்லாத சமயத்தில் தான் செய்த தவறுகளுக்குப் பரிகாரம் செய்ய நினைத்த இந்திரன், அவரிடமே யோசனை கேட்க, அவர் தீர்த்த யாத்திரை செல்லும்படி ஆலோசனை கூறினார். அவரின் ஆலோசனைப்படி தீர்த்தயாத்திரை மேற்கொண்ட இந்திரன், ஒரு கடம்பவனத்தை அடைந்தவுடன் தனது தோள்களிலிருந்து பாவச்சுமை அகற்றப்பட்டது போல் உணர்ந்தான்.

தன் பாவங்கள் விலகியதற்கான காரணத்தை அறிய தேடியவனின் கண்களுக்கு அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் இருப்பது தெரிந்தது. அங்கிருந்த சுயம்பு மூர்த்திக்கு இந்திரவிமானம் அமைத்து வழிபட்டு தன் பாவத்தை போக்கிக் கொண்டான். இந்திரன் வழிபட்ட அந்நாளே சித்ரா பவுர்ணமி என்றும் கூறுகின்றனர். இந்திரன் வழிபட்ட அந்தப் பகுதியே பின்னர் மதுரை மாநகராயிற்றாம். இன்றும் கூட, சித்ராபவுர்ணமி இரவில் தேவேந்திரனே வந்து மதுரை சுந்தரேஸ்வரருக்கு பூஜை செய்வதாக ஐதீகம்.

மதுரையில் சித்திரை திருவிழா: மதுரையில் திருமலை நாயக்கர் காலத்துக்கு முன் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சித்திரையிலும், மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பங்குனியிலும் நடைபெறும். பங்குனி மாதம் மக்கள் விவசாய வேலையில் ஈடுபடும் காலம். அப்போது மக்கள் கையில் பணப்புழக்கமும் குறைவாக இருக்கும். எனவே மீனாட்சி திருமணத்திற்கும், தேர்த் திருவிழாவுக்கும் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. அப்போது சைவ-வைணவ பேதமும் இருந்த காலம்.

எனவே, மன்னர் திருமலை நாயக்கர் யோசனை செய்து, பங்குனியில் நடைபெற்ற விழாவை சித்திரைக்கு மாற்றி, கள்ளழகர் விழாவையும் அத்துடன் இணைத்து விட்டார். மன்னரின் உத்தரவை மக்களும் ஏற்றனர். அவர் எண்ணியபடி, மீனாட்சி திருமணம், தேர் விழா, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாக்களில் மக்கள் கூட்டம் நிரம்பி மதுரை குலுங்கியது. சைவ – வைணவ பேதமும் நீங்கி அனைவரும் ஒன்றிணைந்து இவ்விழாவை இன்றளவும் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள வீர அழகர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா மதுரையில் நடைபெறுவதுபோலவே நடைபெறுகிறது. மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது போலவே இங்கும் சித்திரைப் பவுர்ணமி தினத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தூத்துக்குடி: பொதுவாக சிவாலயங்களில் ஐப்பசி மாதம்தான் அன்னாபிஷேக விழா நடைபெறும். ஆனால், தூத்துக்குடியிலுள்ள சங்கமேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடத்தப்படுவது தனிச்சிறப்பு. மூலவருக்கு மட்டுமின்றி, ஆலயத்திலுள்ள எல்லா சன்னதி மூர்த்தங்களுக்கும் அன்னாபிஷேகம் செய்வர். சித்திரை மாத பிரம்மோற்சவம் பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடக்கும். சித்திரை மாதத்தில் பல்வேறு திருவிழாக்கள் நடக்கின்றன.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct21

சரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ் வடமராட்சி ஸ்ரீ வல்லிபு

Oct21

‘புரட்டாசி சனி’ என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை

Oct21

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், நேற்றைய தினம் சுமார் 1 இலட

Oct21

கொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய

Oct21

கிளிநொச்சியில் டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன

Oct21

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டம

Oct21

வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்த சுவாமி ஆலய தே

Oct21

ஆடி மாதத்தில் வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று அ

Oct21

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலயம் மற்

Oct21

நாவற்­கு­ழி­யில் கருங்­கற்­க­ளால் அமைக்­கப்­பட்ட திரு­வ

Oct21

உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற

Oct21

வரலாற்றுச் சிறப்புமிகு நயினாதீவு அருள்மிகு ஶ்ரீ நாகபூ

Oct21

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசு

Oct21

வரலாற்றுச் சிறப்பு மிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின

Oct21

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக்

Oct21

சித்திராப் பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும

Oct21

யாழ்ப்பாணம் தச்சன் தோப்பு, திருவருள் மிகு முத்துக்குமா

Sep10

நமக்கான களத்தை நாமே உருவாக்குவோம் எதிர் வரும் 13/02/2016 அன்ற

Sep10

நமக்கான களத்தை நாமே உருவாக்குவோம் எதிர் வரும் 13/02/2016 அன்ற

Sep10

யாழ். இணுவில் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்க முன்பள்

Sep10

உலகமெல்லாம் பரந்து வாழும் கிறிஸ்தவர்கள் இன்று ஜேசு கிற

Sep10

ஆஸ்திரேலிய நகரான சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட

Sep16

யாழ்ப்பாணம்- நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின

Sep16

தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் நிகழ்வு 15/09/2019 காலை 9:30 ம

Oct05

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் தமிழர் ப

Oct05

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் வசந

Oct05

மகாத்மா காந்தியின் அகிம்சையை போதிப்பதற்கு இந்திய தூதர

Oct05

சர்வதேச ரீதியில் செயற்பட்டுவரும் லியோ கழகத்தின் செயற்

Oct05

பரிஸ் கலாலயம் கலைக்கல்லூரி அதிபர் பரதசூடாமணி கௌசலா ஆனந

Oct18

பிரான்ஸ் நாட்டில் எமது தாயக இசைவாணர் கண்ணன் அவர்களின்

Oct18

அனைத்துலக தமிழ்கலை நிறுவகமும் (IITA), பிரான்சு தமிழ்ச்சோலை

Oct21

Dortmund தமிழர் அரங்கில் இன்று வெகு சிறப்பாக நடைபெற்ற திரைப்

Oct24

நீர்வேலியை தாயகமாகக் கொண்ட பாடகி அபிநயா இலண்டனில் இருந

Nov03

இசைவாணர் கண்ணன் அவர்களுக்கு பிரான்ஸ் ஸ்ரீ காமாட்ஷி அம

Nov01

சுவிஸ் நாட்டில் இசைவாணர் கண்ணன் மாஸ்டர் அவர்களுக்கு மத

Nov03

கண்ணன் மாஸ்ரர் அவர்களுக்கு 26_10_2019 அன்று யேர்மன் வூப்பற்ற

Nov09

08.11.2019 வெள்ளிக்கிழமை காலை 08.00 மணிக்கு மாணவர்களின் இன்னிய அ

Nov09

மாணவர்களிடம் எவ்விதமான கட்டணங்களையும் அறவிடாது இலவசம

Nov11

காரைநகர் புதுறோட் கிழவன்காடு கந்தசுவாமி கோயிலில் 02.11.2019

Nov27

கனடாவில் புகழ்பெற்ற இசைக்குழுவும் இசைப் பயிற்சிக் கல்

Nov27

யேர்மனி-ஒபகௌசன் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் 31வது ஆண்

Nov27

யேர்மனி தமிழ்க் கல்விச் சேவையுடன் இணைந்து சேவையாற்றும

Nov27

செல்வபுரம் முல்லைத்தீவு புனித யூதாததேயு முன்பள்ளி பாட

Dec02

பிரித்தானியா பாராளமன்றத்தில் உலக அளவில் வைத்தியதுறைய

Dec08

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் ப

Dec16

மகாகவி பாரதியாரின் 133 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, இன

Jun05

விடுதலை போராட்டத்தின் முதல் வித்து பொன். சிவகுமாரனின் 44

Aug19

நிதி அமைச்சின் கீழ் தொழிற்படுகின்ற இலங்கை சமூக பாதுகாப

Aug19

அன்னதானக் கந்தன் விபூதி கந்தன் என அடியவர்களால் அழைக்கப

Aug19

அலங்காரக் கந்தனை மேலும் அழகுபடுத்தும் முகமாக அமைக்கப்

Aug19

எழுவைதீவில் சிறப்பாக இடம்பெற்ற மரநடுகை விழா எழுவைதீவ

Aug19

புதுப்பொலிவுடன் புனரமைப்பு செய்யப்பட்ட ஊர்காவற்துறை

Aug19

பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற யாழ் நோக்கி எனும் செயற்திட்டத

Aug20

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேவஸ்தான வருட

Aug21

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த

Aug21

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , தெல்லிப்பழை பலநோக்க

Aug21

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நி

Aug22

வாழைச்சேனை பிரதேசத்தில் நிலக்கீழ் நீர் மட்டம் குறைதல

Aug22

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நி

Aug23

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கொடியேற்ற உற்சவம் படங்கள

Aug25

யாழ் வணிகர் கழகத்தினரால்வருடந்தோறும் வறுமைக்கோட்டுக்

Aug25

யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அம

Aug26

பண்டார வன்னியனின் வெற்றி நாள் நினைவும் மறைந்த தலைவர் த

Aug26

ஈழ விடுதலை போராட்டத்தின் முதலாவது போராளி பொன்.சிவகுமரன

Aug30

திருமலை ஏழுமலையானுக்கு சென்னையைச் சோ்ந்த அசோக் லேலண்

Aug31

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயமாக விளங்கும் ச

Sep02

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள திருநாகேஸ்வரத

Sep02

உலகலாவிய ரீதியில் திருக்குடும்ப கன்னியர்கள் தங்கள் சப

Sep06

இளைஞர்களுடைய செயல்பாடுகளை பார்த்து தமிழ் கட்சிகளின் த

Sep09

வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய வர

Sep11

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள பாரதியாரின் நினைவு த

Sep11

திருவில்லிபுத்தூர் ஆனந்தா வித்யாலயாபள்ளியில் ஜே.சி.ஐ ஸ

Sep11

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தை மு

Sep13

மன்னார் இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இந்து எழு

Sep14

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச

Sep15

அமைதிப் படையாகத் தாயக மண்ணில் காலடி எடுத்து வைத்து ஆக்

Sep15

வவுனியாவின் மூத்த பிரஜையும் ஆன்மீகவாதியுமான கவிஞர் சி

Sep21

மறைதூதுப் பணியான மறைக்கல்வியை நோக்கிப் பயணிப்போம்" எனு

Sep22

நாகர்கோவிலில் 1995 ம்ஆண்டு இலங்கை விமானப்படையின் குண்டு

Sep22

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஶ்ரீதேவி பூதேவி சமேத மகா

Sep27

சிறப்புற இடம்பெற்ற கல்வியியற்றுறைத் தலைவரின் மணிவிழா

Sep28

நெடுந்தீவின் உறவுகளை ஒன்றினைக்கும் வகையில் ஏற்பாடு செ

Sep28

பருத்தித்துறைசற்கோட்டை புனித சவேரியார் ஆலய வருடாந்த வ

Sep28

நானாட்டான் றீகன் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய

Oct01

யாழ் மருத்துவ சங்கத்தின் இவ்வருட விஞ்ஞான அமர்வு சிறப்

Oct02

வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின

Oct03

தென்மராட்சி சரசாலை குருவிக்காடு பறவைகள் சரணாலயத்தில்

Oct04

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன

Oct07

கௌரவ வடமாகாண ஆளுநர் p.s.m சாள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று

Oct09

ஒக்டோபர் 9 உலக அஞ்சல் தினம் இன்று யாழ்ப்பாணம் பிரதம தபா

Oct09

வேலையில் இருந்து வீடு நோக்கி எனும் தொனிப்பொருளில்" சமூ

Oct16

இந்தியாவின், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத

Oct17

அலை ஓசை கல்விக்கழக நிர்வாகிகளில் ஒருவரான ஜெகதீஸ்வரன் ச

Oct18

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தில், ஜெய்க்கா செய

Oct18

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொது மக்கள் தொடர்பு அலு

Oct18

விதையனைத்தும் விருட்சம் அமைப்பினரின் ஏற்பாட்டில் இடம

Oct24

யாழ் மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில

Oct25

விஜயதசமி நாளான இன்றைய தினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற

Oct28

வவுனியா குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ தித்திவிநாயகர் ஆல

Oct28

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர் நலன்புரிச் ச

Nov08

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ்ப்பாணம் மாவட்ட அலுவகம் இ

Nov14

தீபஒளித்திருநாளினை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் உள்ள

Nov14

உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவளி

Nov14

கோவையில் தீபஒளி திருநாளாம் தீபாவளி பண்டிகையை பொதுமக்க

Nov15

வடமராட்சி கிழக்கு பிரதேச லயன் கழக ஏற்பாட்டில் வடமராட்ச

Nov15

வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமனாறு செல்வச் சந்நிதி ஆலய

Nov17

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, ஹாட்லி கல்லூரி மாணவர்களது

Nov19

யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பி

Nov21

பரமேஸ்வராக் கல்லூரி இயக்குநர் சபை, ஶ்ரீ பரமேஸ்வரன் ஆலய

Nov21

23 வது உலக மீனவர் தின நிகழ்வு தேசிய மீனவர் ஒத்துழைப்பு இய

Nov22

ஒரு இலட்சம் (கி.மீ) வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் க

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 25 (11:26 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 25 (11:26 am )
Testing centres